বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 13, 2019

இந்த வட்டங்கள் என்ன வண்ணத்தில இருக்கு..?- நீங்களே பார்த்து சொல்லுகளேன்!

இந்த இல்யூஷனால், உங்களால் ஸ்திரமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லையா?

Advertisement
விசித்திரம் Edited by

இந்த இல்யூஷனில் 12 வட்டங்கள் இருக்கின்றன. அந்த வட்டங்கள் மீது பல வண்ணங்களில் ஆன கொடுகள் உள்ளன

சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட ஓர் ஆப்டிக்கல் இல்யூஷன் (ஒளியியல் மாயை), படுவைரலாகி வருகிறது. பலருக்கு இந்த இல்யூஷன், தூக்கத்தை இழக்கச் செய்துள்ளது. இந்த ‘கான்ஃபெட்டி' (Confetti) இல்யூஷனை உருவாக்கியது டேவிட் நோவிக் என்னும் பொறியாளர். 

இந்த இல்யூஷனில் 12 வட்டங்கள் இருக்கின்றன. அந்த வட்டங்கள் மீது பல வண்ணங்களில் ஆன கொடுகள் உள்ளன. அந்தப் படத்தை முதல் முறை பார்த்தால் பச்சை, சிவப்பு மற்றும் ஊதா  நிறங்களில் வட்டங்கள் தெரியும். ஆனால் கொஞ்சம் கவனம் செலுத்திப் பார்த்தால், அனைத்து வட்டங்களும் ஒரே வெளிர் காவி நிறத்தில் இருப்பதை உணரலாம். 

“இந்த கான்ஃபெட்டி இல்யூஷனில், மஞ்சள், சிவப்பு, ஊதா நிறங்களில் வட்டங்கள் கொண்டுள்ளது தெரியும். ஆனால், அனைத்து வட்டங்களும் ஒரே நிறம்தாங்க” என்று நோவிக், இல்யூஷனை ட்விட்டரில் பகிர்ந்து, பதிவை இட்டுள்ளார். அவர் மேலும், “படத்தின் அளவை சுருக்க சுருக்க அதன் வீரியம் அதிகமாகிக் கொண்டே போகும்” என்றும் கூறியுள்ளார். 
 

இந்த இல்யூஷனால், உங்களால் ஸ்திரமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லையா. கவலை வேண்டாம். பல நெட்டிசன்களுக்கும் இதே நிலைதான் உள்ளது. அவற்றில் சில பதிவுகளைப் பார்க்கலாம். 

இந்த இல்யூஷனை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமா. அதற்கு ஒரு ட்விட்டர் பயனர் வீடியோ செய்துள்ளார். அதையும் பாருங்கள்:

Advertisement
Advertisement