New Delhi: இந்திய - அமெரிக்க ராணுவங்கள் இணைந்து பணியாற்ற வழி செய்யும் மிக முக்கிய ஒப்பந்தமான COMCASA (Communications Compatibility and Security Agreement) தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் ராணுவ தகவல்களை பெறவும், அமெரிக்காவின் உயர் தர ஹார்ட்வேர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தவும் இந்தியாவுக்கு அனுமதி கிடைக்கிறது.
அமெரிக்க அரசு செயலாளர் மைக் போம்பியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஜிம் மேட்டிஸ், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்று, ஒப்பந்தத்தை நிறைவேற்றினர்.
இந்த ஒப்பந்தம் குறித்து தெரிந்து கொள்ள 5 தகவல்கள்
1. COMCASA ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கிடையே என்க்ரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் செய்யவும், செயற்கைக்கோள் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் வழி வகை செய்கிறது.
2.அமெரிக்க போர் கப்பல் அல்லது போர் விமானங்கள், சீன போர் கப்பல் அல்லது நீர் மூழ்கி கப்பல் இருப்பதை கண்டறிந்தால், அந்த தகவலை அப்பகுதியில் இருக்கும் இந்திய போர் விமானம், போர் கப்பல், நீர் மூழ்கி ஆகியவற்றுக்கு என்கிரிப்ட் செய்து தகவல் அனுப்பும்.
3. பாதுகாப்பு துறைக்கான தொழில்நுட்ப அறிவு பகிர்வுக்கு சட்டப்படி அனுமதி தருகிறது இந்த ஒப்பந்தம்.
4. இந்த ஒப்பந்தம் மூலம், கடல் பகுதியை கண்காணிக்கும் ட்ரோனகளை இந்தியாவால் அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடியும்.
5. ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியா வாங்குவதை அமெரிக்கா எதிர்க்கும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள