This Article is From Dec 18, 2019

இது போன்ற சவாவல்களின் அர்த்தம் என்ன? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி!!

Citizenship (Amendment) Act: ஏற்கனவே பாகிஸ்தான் குடிமக்களாக இருப்பவர்களுக்கு நாம் ஏன் குடியுரிமை வழங்க வேண்டும்? இது போன்ற சவாவல்களின் அர்த்தம் என்ன?

இது போன்ற சவாவல்களின் அர்த்தம் என்ன? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்தார்.

New Delhi:

ஏற்கனவே பாகிஸ்தான் குடிமக்களாக இருப்பவர்களுக்கு நாம் ஏன் குடியுரிமை வழங்க வேண்டும்? பிரதமர் மோடி விடுத்த சவாலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். 

முன்னதாக, நேற்றைய தினம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் ஒரு சவாலை விடுக்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவிக்கத் தயாரா? அப்படி அறிவித்தால் அதற்கான பிரதிபலனை நாட்டு மக்கள் அவர்களுக்கு அளிப்பார்கள். 

இந்தியாவில் பொய்யான தகவல்களையும், அச்சத்தையும் காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது. நாங்கள் தற்போது குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். முஸ்லிம்கள் மத்தியில் காங்கிரஸ் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள எந்த குடிமக்களையும் குடியுரிமை திருத்த சட்டம் பாதிக்காது. 

அண்டை நாட்டிலில் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இந்தியா வந்துள்ள சிறுபான்மையின மக்களுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்வீட்டர் பதவில் கூறியதாவது, ஏற்கனவே பாகிஸ்தான் குடிமக்களாக இருப்பவர்களுக்கு நாம் ஏன் குடியுரிமை வழங்க வேண்டும்? இது போன்ற சவாவல்களின் அர்த்தம் என்ன?

மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் தாராளவாதிகளாக, மதச்சார்பற்றவர்களாக, சகிப்புத்தன்மை கொண்டவர்களாக மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மதிப்புகளுக்கு அரசாங்கம் சவால் விடுக்கிறதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதேபோல், பிரதமர் மோடியின் சவாலுக்கு பதிலளித்த மற்றொரு காங்கிரஸ் தலைவர் கபில் சிபில், தனது ட்வீட்டர் பதிவில், அன்புள்ள மோடி ஜி, பாகிஸ்தான் குடிமக்களுக்காக ஆவேசப்படுவதற்கு பதிலாக தயவுசெய்து உங்கள் கவனத்தை இந்திய குடிமக்கள் மீது திருப்பி அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்து பாருங்கள். 

எங்கள் குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கவே இந்திய மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

2015ம் ஆண்டுக்கு முன்பாக பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய குடியுரிமை அளிக்கிறது.

இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 
 

.