This Article is From Aug 07, 2019

மாநிலத்துக்கும் யூனியன் பிரதேசத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன..?

ஒவ்வொரு மாநிலமும் நில வாரியாக, வரலாற்று வாரியாக, கலாசாரம், மொழி, பண்பாடு வாரியாக வித்தியாசங்களைப் பெற்றிருக்கும். 

Advertisement
இந்தியா Written by

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது முற்றிலும் வேறு. அதிலும் புதுச்சேரி மற்றும் டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு, சில சிறப்பு அதிகாரங்களும் இருக்கின்றன.

இந்தியா… பல தேசிய இனங்களை உள்ளடிக்கிய நம் நாட்டில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் அதிகாரம் பங்கிடப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்துகளோடு இருந்த ஜம்மூ காஷ்மீர் மாநிலம் தற்போது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் மொத்தமாக 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் என உருமாறியுள்ளன.

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது முற்றிலும் வேறு. அதிலும் புதுச்சேரி மற்றும் டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு, சில சிறப்பு அதிகாரங்களும் இருக்கின்றன. அது குறித்து பார்ப்போம்.

மாநிலம் என்றால் என்ன?

Advertisement

இந்திய அரசியல் சட்ட சாசனப்படி, அங்கீகரிக்கப்பட்ட ஓர் மாநிலத்தை நிர்வகிக்கத் தனியாக ஓர் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும். இந்த அரசு மூலம் மாநிலத்துக்குத் தேவையான தனிச் சட்டங்கள் நிறைவேற்ற முடியும். மாநிலத்துக்குத் தனியாக சட்டமன்றம், முதல்வர் மற்றும் பல்வேறு துறைகளை நிர்வகிக்க அமைச்சர்கள் இருப்பார்கள். மாநிலத்தில், இந்திய ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் இருப்பார். 

மத்தியில் இருக்கும் அரசுக்கும் மாநிலத்தில் அமைந்துள்ள அரசுக்கும் இடையில் அதிகாரப் பங்கீடு இருக்கும். சட்ட ஒழுங்கு, சுகாதாரம், உள்ளூர் நிர்வாகம் உள்ளிட்டவை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும். தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும். 

Advertisement

ஒவ்வொரு மாநிலமும் நில வாரியாக, வரலாற்று வாரியாக, கலாசாரம், மொழி, பண்பாடு வாரியாக வித்தியாசங்களைப் பெற்றிருக்கும். 

யூனியன் பிரதேசம் என்றால் என்ன?

Advertisement

யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு நேரடியாக நிர்வகிக்கும். யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசு, துணை நிலை ஆளுநரை நியமிக்கும். அவர் ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருந்த பிரதேசத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பார்த்துக் கொள்வார். 

அதே நேரத்தில் யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் வரும் டெல்லி மற்றும் புதுச்சேரியில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை இருக்கும். அதில் முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த இரு யூனியன் பிரதேசத்தில் இருக்கும் சட்டமன்றத்துக்கு சில அதிகாரங்கள் இருக்கும். ஒரு சிறிய மாநிலம் போலவே இவை செயல்படும். மற்ற யூனியன் பிரதேசங்களில் இப்படியொரு அமைப்பே கிடையாது. அவை நேரடியாக மத்திய அரசால் நிர்வகிக்கப்படும். 

Advertisement

தற்போது ஜம்மூ காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட உள்ளது. ஜம்மூ மற்றும் காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜம்மூ மற்றும் காஷ்மீருக்குத் தனியே சட்டசபை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, சண்டிகர், டாமன் மற்றும் டியூ, லட்சதீபம், புதுச்சேரி, டெல்லி, லடாக் மற்றும் ஜம்மூ காஷ்மீர் ஆகிய 9 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன.

Advertisement