This Article is From Apr 16, 2019

“அடிப்படை தேர்தல் செலவுக்கே கல்தா கொடுத்த திமுக!”- குமுறும் கூட்டணிக் கட்சிகள் #Exclusive

பல கருத்துக் கணிப்புகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி 30 முதல் 35 நாடாளுமன்றத் தொகுதிகளைப் கைப்பற்றும் என்றே சொல்கின்றன

“அடிப்படை தேர்தல் செலவுக்கே கல்தா கொடுத்த திமுக!”- குமுறும் கூட்டணிக் கட்சிகள் #Exclusive

திமுக சறுக்கக்கூடிய இடமொன்று இருப்பதை அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியின் தலைமை நம்மிடம் சுட்டிக்காட்டியுள்ளது. 

தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 18 சட்டமன்றத் இடைத் தேர்தலுக்கான பரப்பரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் அனைத்து பிரதான கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் வெளியான பல கருத்துக் கணிப்புகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி 30 முதல் 35 நாடாளுமன்றத் தொகுதிகளைப் கைப்பற்றும் என்றே சொல்கின்றன. பாஜக மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி. ஆளுங்கட்சியான அதிமுக-வில் இருக்கும் பிளவு. கருணாநிதி மறைவால் திமுக மீதிருக்கும் அனுதாபம் என்ற பல காரணிகளும் திமுக-வுக்கே சாதகமாக இருக்கின்றன. ஆனால், திமுக சறுக்கக்கூடிய இடமொன்று இருப்பதை அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியின் தலைமை நம்மிடம் சுட்டிக்காட்டியுள்ளது. 

61sc0mcg

“பாஜக - அதிமுக-வுக்கு எதிராக மக்களின் மனநிலை இருப்பது திமுக-வுக்கு இந்தத் தேர்தலில் மிகப் பெரிய சாதகம்தான் என்றாலும், திமுக தெரிந்தே ஒரு இடத்தில் சறுக்கியுள்ளது” என்று கள நிலவரத்தை விவரிக்க ஆரம்பித்த கூட்டணிக் கட்சித் தலைமைக்கு நெருக்காமன ஒருவர், தொடர்ந்து,

“மாவட்டங்களின் முக்கிய இடங்களில் பிரசாரக் கூட்டம் நடத்தியதில் திமுக-வினர் காட்டிய அக்கறையை, மக்களிடம் வீதி வீதியாக சென்று பரப்புரை செய்வதில் காட்டவில்லை. பல இடங்களில் மிக மெத்தனமான வேலையே நடந்துள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சி, பல இடங்களில் பக்கவாக பணப் பட்டுவாடா செய்து, தங்கள் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொண்டது. ஆனால், தேர்தலுக்கான அடிப்படை செலவைச் செய்யவே பல திமுக மாவட்டச் செயலாளர்கள் யோசித்தனர். தாங்கள் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்கின்ற அதீத நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இது கண்டிப்பாக ஆட்சிக்கு வரத் துடிக்கும் ஒரு கட்சிக்கு நல்லத்தல்ல. காரணம், கடைசி ஒரு நாளில் கூட நிலைமை மாறலாம்” என்று வருத்தப்பட்டார். 

0qk46eeg

பல இடங்களில் கூட்டணிக் கட்சியில் இருக்கும் முக்கியத் தலைவர்கள் பேசினால் கூட்டம் கூடுவதைப் பார்த்த திமுக நிர்வாகிகள் சிலர், அந்தத் தலைவர்களை மட்டும் அடுத்தடுத்து நடந்த பரப்புரைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லையாம். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வளர்ந்துவிடக் கூடாது என்று திமுக நிர்வாகிகள் சிலர் செய்த இந்த வேலை, தேர்தலில் எதிரொலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

மதுரையில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ஒரு பிரபலத்திடமும் கள நிலவரம் பற்றி பேசினோம். அங்கும் அதே பல்லவிதான். “நாம்தான் இந்த முறை ஆட்சியமைக்கப் போகிறோம் என்கின்ற மிதப்பு திமுக பிரமுகர்களிடையே அதிகமாக தென்பட்டது. இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கவே இல்லை. தானாக கைக்கு வரும் பழத்தைத் தட்டிவிடுவது போல் இருந்தது அவர்களின் செயல்பாடு” என்று குமுறுகிறார். 

qgantqgo

மத்திய சென்னை, தேனி போன்ற இழுபறியான தொகுதிகளில் அதிமுக, அமமுக கட்சிகள் கள வேலையில் துடிப்பாக இருந்த போதும், அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் திமுக செயல்படவில்லை என்கிறார் இன்னொரு கூட்டணிக் கட்சி பிரமுகர். கருணாநிதி இல்லாமல் முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். சீமான், கமல் போன்றோரின் அரசியல் எழுச்சியால் திமுக ஆதரவு ஓட்டு சிதறும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், உடன் பிறப்புகள் இன்னும் முனைப்புடன் கள செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதே பொது விமர்சனமாக உள்ளது. 

7fubddno

.