This Article is From Nov 25, 2019

“இட ஒதுக்கீடு தேவையா..?”- சீனாவும் இந்தியாவும் ஒன்றா… ஒப்பிட்டு சரவெடி பதில் கொடுத்த ஆ.ராசா!

“இக்காலத்தில் முன்பு இருந்தது போல சாதி இல்லை. இருந்தும் ஏன் இட ஒதுக்கீடு மூலம் பாகுபாடு காட்டப்படுகிறது?"

“இட ஒதுக்கீடு தேவையா..?”- சீனாவும் இந்தியாவும் ஒன்றா… ஒப்பிட்டு சரவெடி பதில் கொடுத்த ஆ.ராசா!

"நமது அண்டை நாடான சீனாவில் இதைப் போன்ற இட ஒதுக்கீடு இல்லாமல்தானே பொருளாதார வளர்ச்சிப் பெற்றார்கள்?"

திமுக-வின் இளைஞரணிப் பயிற்சிப் பாசறையில், இளைஞர் ஒருவர், ‘இட ஒதுக்கீட்டின் அவசியம் என்ன' என்பது குறித்து கேட்ட கேள்விக்கு, திமுக எம்.பி-யும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா கொடுத்த பதில் கவனம் ஈர்த்துள்ளது. 

இளைஞர் ஒருவர், “இக்காலத்தில் முன்பு இருந்தது போல சாதி இல்லை. இருந்தும் ஏன் இட ஒதுக்கீடு மூலம் பாகுபாடு காட்டப்படுகிறது. நமது அண்டை நாடான சீனாவில் இதைப் போன்ற இட ஒதுக்கீடு இல்லாமல்தானே பொருளாதார வளர்ச்சிப் பெற்றார்கள்?,” என்று கேள்வி கேட்டார். 

அதற்கு ஆ.ராசா, “இந்தியாவையும் சீனாவையும் நீங்கள் ஒப்பிடவே முடியாது. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவையும் எந்த நாட்டையும் ஒப்பிட முடியாது. காரணம், இந்தியாவில் இருக்கும் சாதி முறையானது, வேறு எங்கும் இருந்திருக்கவில்லை. இங்கு மட்டும்தான் பிறப்பின் அடிப்படையில் ஒருவனைப் படிக்காதே என்று சொன்னார்கள், வேலைவாய்ப்பைப் பிடிங்கினார்கள், வாழும் உரிமையை மறுத்தார்கள்.

ஓராண்டு, ஈராண்டு அல்ல… 2,000 ஆண்டுகள் நம்மை இப்படித்தான் வைத்திருந்தது ஒரு கூட்டம். அப்படி இருக்கையில் எந்த சாதியை வைத்து நம்மை ஒடுக்கினார்களோ, அதே சாதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது அனைத்து சமூகமும் முன்னேறுவதற்கான இறுதி தீர்வு கிடையாது. தற்காலிகத் தீர்வு மட்டுமே. ஒரு பாலம் உடைந்து விட்டால், அதற்கு மாற்றாக ஒரு தற்காலிக கட்டமைப்பு கட்டப்படுவது போலத்தான் இது. எனவே, சீனாவை ஒப்பிட்டு இந்திய நிலைமை கேள்வி கேட்கக் கூடாது,” என்று அதிரடியாக பதில் சொன்னார். 

.