This Article is From Oct 03, 2019

உள்ளாட்சித் தேர்தல் ‘உரசல்’ - BJP - ADMK கூட்டணி தொடருமா..? - OPS பதில்!

விக்கிரவாண்டியில் திமுக-வும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன

உள்ளாட்சித் தேர்தல் ‘உரசல்’ - BJP - ADMK கூட்டணி தொடருமா..? - OPS பதில்!

இடைத் தேர்தலைத் தொடர்ந்து அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் காலியாக இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. களத்தில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. 

விக்கிரவாண்டியில் திமுக-வும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, இரு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவே, 2 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தது. இதனால், பாஜக தரப்பு அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. 

இடைத் தேர்தலைத் தொடர்ந்து அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பாஜக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையில் இணைந்து செயல்படுவதில் ஒற்றுமை இல்லை என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், ‘கூட்டணி தொடர்வது கஷ்டம்' என்று இரு கட்சியினரும் பேசத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், “2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைந்த அதிமுக - பாஜக கூட்டணி, மிகவும் வலுவாக உள்ளது. இரு கட்சிக்கும் இடையில் கூட்டணி தற்போதும் வலுவாகவே இருக்கிறது. எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

.