Read in English
This Article is From Aug 24, 2020

சோனியாவின் ராஜினாமா அறிவிப்பு: மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி கூறியது என்ன?

CWC Meeting: இந்த கடிதம் எதிர்பாராதது. இதுபோல தலைமையை பலவீனப்படுத்துவது, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துவதாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement
இந்தியா Posted by

சோனியாவின் ராஜினாமா அறிவிப்பு: மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி கூறியது என்ன?

New Delhi:

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும் படியும், தனக்கு மாற்றாக வேறு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் என சோனியா காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து, சில மணி நேரத்திலே, சோனியா தலைவர் பதவியை தொடரவில்லை என்றால், ராகுல் காந்தி கட்சி தலைவராக பதவி ஏற்க வேண்டும் என்றனர். 

கட்சித் தலைமையை மாற்றியமைக்க கோரி  மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 26 பேர் கடிதம் அளித்தது வெளியில் தெரிந்ததை தொடர்ந்து, சோனியா தனது முடிவை அறிவித்தார். 

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா தனது முடிவை தெரிவித்ததும், சோனியாவே தொடர்ந்து தலைவராக இருக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். தொடர்ந்து, கடிதம் அளித்தவர்களையும் அவர் விமர்சித்தார். 

Advertisement

இந்த கடிதம் எதிர்பாராதது. இதுபோல தலைமையை பலவீனப்படுத்துவது, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துவதாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மன்மோகன் சிங்கை தொடர்ந்து பேசிய ஏ.கே.அந்தோணி கூறும்போது, அந்த கடிதத்தை விட, கடிதத்தில் உள்ள உள்ளடக்கங்கள் கொடூரமானது என்று தெரிவித்துள்ளார். மேலும், சோனியாவின் தியாகங்கள் குறித்து பேசிய அவர், ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படியும் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

தலைமை மீதான "நிச்சயமற்ற தன்மை" மற்றும் கட்சியில் ஏற்பட்டுள்ள சறுக்கல் தொண்டர்களை மனச்சோர்வடையச் செய்து கட்சியை பலவீனப்படுத்தியுள்ளது என்று மூத்த தலைவர்களான கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவான், விவேக் தங்கா மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சி தலைமையை விமர்சித்து கடிதம் அளித்ததில் கடும் கோபமடைந்த ராகுல் காந்தி, இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் சரமாரி கேள்வி எழுப்பினார். மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் நெருக்கடி நிலையை சந்தித்து வரும் நிலையில், கட்சி தலைவர் சோனியா காந்தி உடல்நலம் சரியில்லாத நிலையில், இப்படி ஒரு நேரத்தில் எதற்காக இதுபோன்ற கடிதம் அளிக்கப்பட்டுள்ளது? என்று அவர் கண்டனம் தெரிவித்தார். 

Advertisement