ஒருமனதாக ராகுல் காந்தியின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்ததனர்
New Delhi:
மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்த ராகுல் காந்தி, இதுதொடர்பான கடிதத்தை காரிய கமிட்டியிடம் அளித்துள்ளார். அவரது கடிதம் நிராகரிக்கப்பட்டதாகவும், அவர் தலைவர் பொறுப்பில் தொடர்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 இடங்களில் 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியடைந்துள்ளது. இதையடுத்து அக்கட்சி சார்பில் நேற்று டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் வழங்கினார். தலைவர் பொறுப்பில் வேறு யாரேனும் இருங்கள் என்று மீண்டும் ராகுல் காந்தி அழுத்தம் கொடுத்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது “என் சகோதரியை இதில் இழுக்காதீர்கள். காந்தியின் குடும்பத்திலிருந்து மட்டுமே காங்கிரஸிற்கு தலைவர்கள் வரவேண்டும் என்று இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டம் முடிந்தபின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் “காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக ராகுல் காந்தியின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்ததனர்” மேலும் தேர்தல் பிரசாரத்தை சிறப்பாக மேற்கொண்டார் என பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா ராகுல் காந்தி சவாலான கால கட்டத்தில் நம்மை வழிநடத்த வேண்டும் என்று தெரிவித்தார்
2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ், மொத்தமாக 52 இடங்களைக் கைப்பற்றியது. 17 மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.