நிகழ்ச்சியில் காந்தியின் வாழ்க்கையைப் பறைசாற்றும் விதத்தில் 8 முன்னணி நடிகர்கள் ஒரு சிறிய காணோளியை உருவாக்கியிருந்ததும் காட்சிப் படுத்தப்பட்டது.
New Delhi: மகாத்மா காந்தியின் (Mahathma Gandhi) 150வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பாலிவுட் நட்சத்திரங்களை தனது இல்லத்தக்கு அழைத்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi). அந்த நிகழ்ச்சியில் காந்தியின் வாழ்க்கையைப் பறைசாற்றும் விதத்தில் 8 முன்னணி நடிகர்கள் ஒரு சிறிய காணோளியை உருவாக்கியிருந்ததும் காட்சிப் படுத்தப்பட்டது.
“சினிமா மூலம் மகாத்மா காந்தி கற்றுக் கொடுத்துதை பரப்புவது, பல இளைஞர்கள் காந்திஜியின் கொள்கைகளை உணரச் செய்வது… என பலவற்றைக் குறித்து இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டோம்.
நமது திரைப்படத் துறை, மிகவும் பரந்துப்பட்ட உயிர்ப்புடன் இருக்கும் துறை. சர்வதேச அளவில் அதன் தாக்கம் மிக அதிகம். நமது திரைப்படங்கள், இசை மற்றும் நடனம் மக்களை இணைக்கவும், சமூகங்களை ஒன்றிணைக்கவும் பயன்படுகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியின்போது ஷாருக் கான், “காந்திஜி மீண்டும் உயிர்பிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். காந்திஜி 2.0 தான் தற்போதைய தேவை. உலகம் மிகவும் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்” என்றார்.
“பிரதமர் மோடியுடன் இன்று நடந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உற்சாகம் கொடுப்பவராகவும், முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார்” என்று பிரதமருக்குப் புகழாரம் சூட்டினார் அமீர் கான்.
இந்த நிகழ்ச்சியில் சோனம் கபூர், கங்கனா ரனாவத், இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஷ்வினி ஐயர், நிதேஷ் திவாரி, எக்தா கபூர், போனி கபூர், ஜெயந்திலால் காடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அக்டோபர் 2 ஆம் தேதி, 1869 ஆம் ஆண்டு குஜராத்தின் போர்பந்தரில் பிறந்தவர் தேசப் பிதா மகாத்மா காந்தி. இந்த ஆண்டு அவரின் 150வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியின்போது பேசிய பிரதமர் மோடி, தண்டியில் காந்திக்காக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். காந்தி, தண்டியில்தான் சத்தியாகிரகத்தை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.