This Article is From Jan 03, 2020

“தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும்…”- உள்ளாட்சித் தேர்தல் பற்றி OPS ஓப்பன் டாக்!

OPS on Local Body Polls - “தேர்தல் முடிவு எப்படி வந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி..."

Advertisement
தமிழ்நாடு Posted by

OPS on Local Body Polls - மொத்தம் 515 மாவட்டக் கவுன்சிலர், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

OPS on Local Body Polls - ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக எதிர்க்கட்சியான திமுக, அதிமுகவை விட பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. தொடர்ந்து, நேற்று இரவு, இன்றும் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று மாலை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. சென்னை மாவட்டம் சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்து இருப்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. 

Advertisement

முதல் கட்ட தேர்தலின் போது 76.19 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.  இந்த வாக்குப்பதிவின் போது வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்கியது  உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 9 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 59.42 சதவீதம் வாக்கு பதிவானது.

மொத்தம் 515 மாவட்டக் கவுன்சிலர், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மீதம் உள்ள பதவிகள் பஞ்சாயத்து தேர்தலுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நடைபெற்று வருகிறது. 

Advertisement

தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து ஓபிஎஸ், “தேர்தல் முடிவு எப்படி வந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, மக்கள் வழங்கும் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்,” என்று கூறியுள்ளார். பல இடங்களில் அதிமுக எம்எல்ஏ மற்றும் எபிக்களின் குடும்பத்தினர் போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக தேர்தல் முடிவுகள் பற்றி பேசிய முன்னாள் எம்பியும், அதிமுக மூத்த நிர்வாகியுமான அன்வர் ராஜா, “சிஏஏவுக்கு ஆதரவாக அதிமுக இருப்பதனால், சிறுபான்மையின மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. சிறுபான்மையினரின் நம்பிக்கையை அதிமுக இழந்துள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன,” என்று கூறியிருந்தார். 

Advertisement


 

Advertisement