This Article is From Sep 05, 2018

போலி செய்திகள் பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்களை அதிகரித்தது வாட்ஸாப்

ஒரு செய்தி பகிரப்படும்போது, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகு மற்றவர்களுக்கு பகிர வேண்டும்

Advertisement
இந்தியா Posted by

வாட்ஸாப்பில் பரப்படும் போலியான செய்திகளை கண்டறிவது பற்றி விழிப்புணர்வு அளிக்கும் வகையில் ரேடியோ மூலம் அந்நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது. இப்போது இரண்டாம் கட்டமாக கூடுதலாக 10 மாநிலங்களில் விளம்பரத்தை நீட்டிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு செய்தி பகிரப்படும்போது, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகு மற்றவர்களுக்கு பகிர வேண்டும், என முதல் கட்டமாக விளம்பரம் செய்தது அந்நிறுவனம். பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் முதல் கட்ட விளம்பரம் செய்யப்பட்டது.

செப்டம்பர் 5-ம் தேதி முதல், அசாம், குஜராத், கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, ஆந்திர, தெலங்கானா, ஒரிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விளம்பரப் பிரச்சாரத்தை தொடங்கியது.

Advertisement

மொத்தம் 8 மொழிகளில் 15 நாட்கள் இந்த பிரச்சாரம் தொடரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸாப்பில் அதிகமாக வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தை அடுத்து இந்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement