வாட்ஸ்ஆப் விவகாரத்தில் பதிலளிக்க இன்னும் சில காலம் தேவை என மத்திய அரசு திங்களன்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
தவறான தகவல்களை வாட்ஸ்ஆப்பில் பரப்புவதால் நிறைய குற்றங்கள் நடைபெறுதற்கு வழி வகுக்கிறது. இதனால் சில விதிமுறைகளை வாட்ஸ் ஆப் பின்பற்ற வேண்டும். மேலும் தவறான தகவல்களை பரப்புவர்களை உடனடியாக கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிய வேண்டும் என அரசு சாரா நிறுவனங்களால் தொடரப்பட்ட வழக்கில், பதில் கூறுமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டிருந்தது.
அதற்கு மத்திய அரசு, இதுகுறித்து பதிலளிக்க மேலும் சில காலம் அவகாசம் தருமாறு கேட்டுள்ளது.
நீதிபதி ரோஹின்டன் பாலி நரிமன் தலைமையிலான நீதிபதிகள் குழுவில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேந்தர் சிங வாட்ஸ்ஆப் விஷயத்தில் பதிலளிக்க மேலும் சில காலம் தேவை என கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் தரப்பில் பேசியவர், வாட்ஸ்ஆப்பில் பரவும் தகவல்களை கண்காணிக்க அதிகாரியை நியமித்துவிட்டதாக கூறியுள்ளனர்.