This Article is From May 15, 2020

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது? உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

கல்லூரிகளில் கொரோனா தொற்று குறித்த ஆய்வுகளும் சில இடங்களில் கொரோனா சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது? உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது? உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கமளித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தின் காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் 16ம் தேதியில் இருந்து மூடப்பட்டன. அதன் பிறகு மார்ச் 24 முதல் மே 17 வரை தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவில் வரும் ஆகஸ்ட்.1ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கும். ஏராளமான கல்லூரிகள் தற்போது கொரோனா முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.

கல்லூரிகளில் கொரோனா தொற்று குறித்த ஆய்வுகளும் சில இடங்களில் கொரோனா சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லூரிகளில் தூய்மைப்பணி முடிந்த பிறகே வகுப்புகள் தொடங்கப்படும் என்றார். 

மேலும், தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வும், மாணவர் சேர்க்கையும் நடைபெறும்.

எனினும் கல்லூரிகளைத் திறக்கும் சூழல் ஏற்பட்டால், அதற்கும் உயர் கல்வித்துறை தயாராகவே இருக்கிறது. அதே நேரத்தில், கல்வி நிலையங்களில் தீவிரக் கண்காணிப்புப் பணிகளும் பாதுகாப்புப் பணிகளும் நடைபெற்ற பிறகே கல்லூரிகள் திறப்பு இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.