இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவாக் சோகமாக உள்ள பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவாக் சோகமாக உள்ள பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதன் கமெண்டுகள் சுவாரயஸ்யமானதாக வந்து வைரலாகின. 2007 உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்தியா வெளியேறிய போது இந்திய வீரர்கள் சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் தான் அது. அதில் சேவாக், சச்சின், ட்ராவிட், தினேஷ் கார்த்திக்ம் ஆகியோர் இருப்பார்கள்.
இதனை கடைசியாக இப்படி எப்போது ரீயாக்ட் செய்தீர்கள் என்றி பதிவிட்டிருந்தார்.
அது சில மணி நேரத்துக்குளாக லட்சம் லைக்குகளையும், சுவாரஸ்யமான கமெண்டுகளையும் அள்ளியது.
இதற்கு ஹர்பஜன் சிங் இந்த படத்தை பார்த்தபின்பு ஏன் இதை பத்விட்டீர்கள் என புரிகிறது என்று கிண்டலாக பதிவிட்டார்.
இன்னும் சிலரோ ''தேர்வில் வினாத்தாளை பார்த்ததும் இப்படித்தான் இருக்கும் என்றும், சாஹோ படத்தஇ பார்த்தபிறகு என்று சிலரும் பதிவிட்டனர்.
ஒரு ட்விட்டர் பயன்பாட்டாளர் இது அம்மா சிக்கன் செய்கிறேன் என்று கூறிவிட்டு ஆனால் அது கசக்கும் என்பதை போன்றது என பதிவிட்டனர்.
சிலர் நேரடியாக கிரிக்கெட்டோடு தொடற்பு படுத்தி இந்தியா அரையிறுதியில் தோற்றதி போன்று என பதிவிட்டிருந்தனர்.
Click for more
trending news