தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் நடக்கும் திமுக கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
மக்களை சந்திக்க கிராமங்களுக்கு வருவது, கோவிலுக்கு வருவதை போல் உணர்கிறேன். ஆட்சி மாற்றம் வரவேண்டும் என நம்மை விட மக்களுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலோ அல்லது உள்ளாட்சி தேர்தலோ வரலாம்.
நாம் நினைப்பவர்கள் பிரதமராக வந்தால்தான் தமிழகத்திற்கு தேவையானதை பெற முடியும். மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழகத்தின் அவல நிலைக்கு காரணமான அதிமுக - பாஜக அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரமிது.
கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து திமுக முறையாக அறிக்கை கொடுத்தது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது.
ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவந்துவிடும் என பலர் அஞ்சுகிறார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்றாலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை சிறையில் அடைப்போம் என்று அவர் கூறினார்.