தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் முழு முடக்க நடவடிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விகள் சமீபமாக மேலெழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் “பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படும். தற்போது, பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் குறித்து எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை. பின்வரும் நாட்களில் சூழலை கருத்தில் கொண்டும், கல்வித்துறை வல்லுநர்களின் ஆலோசனையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்“ என அமைச்சர் கூறியுள்ளார். மேலும், “பாடங்களை குறைப்பது குறித்தும் நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது. “ என்றும் குறிப்பிட்டுள்ளார்.