This Article is From Jul 23, 2020

தமிழகத்தில் திரையங்குகளை திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

அப்படி, மின் அளவீட்டில் ஏதேனும் குளறுபடி நடந்திருந்தால், அடுத்த கணக்கீட்டில் அது சரி செய்துகொள்ளப்படும் என்ற உத்தரவாதத்தையும் அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் திரையங்குகளை திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

தமிழகத்தில் திரையங்குகளை திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கமளித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதாமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பொதுமக்கள் கூட்டமாக கூடும் மால்கள், திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றிக்கு தடை விதிக்கப்பட்டது. 

இதனிடையே, ஊரடங்கும் அடுத்தடுத்த கட்டங்களாக நீட்டிக்கப்பட்டே வருகின்றன. எனினும், ஒவ்வொரு கட்டத்திலும் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இப்படியே கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் பொழுதுபோக்கு பூங்கா, விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது, திரையரங்குகளைத் திறப்பதற்கு தற்சமயம் சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, ஒரு வரிசைக்கு 2 பேர் மட்டும் அமர்ந்து படம் பார்க்கின்றனர். 

அது போல இங்கும் கொண்டு வந்தால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபமாக இருக்காது. அதுபோக, திரையரங்குகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவெடுப்பார் என்று அவர் கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், ஊரடங்கு சமயத்தில் மக்கள் மின் கட்டணம் செலுத்துவதில் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு தாமாக முன் வந்து அறிவித்தது. அதில், எந்தவித தவறும் நடக்கவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அப்படி, மின் அளவீட்டில் ஏதேனும் குளறுபடி நடந்திருந்தால், அடுத்த கணக்கீட்டில் அது சரி செய்துகொள்ளப்படும் என்ற உத்தரவாதத்தையும் அரசு தெரிவித்துள்ளது. 

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில் மக்களை எப்படி பாதுகாக்க வேண்டும். அதற்கு என்ன வழிமுறைகள் செய்ய வேண்டும். அரசுக்கு எப்படி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தால், அது உண்மையான ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி.

அரசு மக்களுக்கு உத்தரவாதத்தை அளித்த பின்னரும், சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய எதிர்க்கட்சி, அதனை மீறி கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தி, மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி அரசியல் செய்கின்றனர். இது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

.