This Article is From Aug 10, 2018

'சீனப் பெருஞ்சுவர் எங்குள்ளது?' என்ற கேள்விக்கு லைப்-லைன் உபயோகித்த நபர்!

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் என்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன

'சீனப் பெருஞ்சுவர் எங்குள்ளது?' என்ற கேள்விக்கு லைப்-லைன் உபயோகித்த நபர்!

'நீங்களும் வெல்லாம் ஒரு கோடி' கேம் ஷோவின் துருக்கி நாட்டு பதிப்பில், வினாவிலேயே பதில் இருக்கும் கேள்விக்கு இரண்டு லைப்-லைன்கள் உபயோகித்தார் போட்டியாளர். இதனால் நெட்டிசன்களின் கேலிக்கு ஆளானார்.

பொருளாதார பட்டதாரியான 26 வயது சு-அய்ஹான் என்ற துருக்கி நாட்டு பெண்மனி, "சீனப் பெருஞ்சுவர் எங்குள்ளது' என்ற கேள்விக்கு இரண்டு லைப்-லைன்கள் பயன்படுத்தி உள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் என்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்விக்கான பதில் உறுதியாக தெரியாததால், சு-அய்ஹான் பார்வையாளர்களின் உதவியை நாடியுள்ளார். 51% பார்வையாளர்கள் சீனச் பெருஞ்சுவர் சீனாவில் உள்ளது என்று வாக்களித்திருந்தனர். மேலும், 49% பார்வையாளர்கள் இந்தியாவில் உள்ளதாக வாக்களித்திருந்தனர்.

பார்வையாளர்களின் பதில்களால் குழப்பம் அடைந்த போட்டியாளர், போன்-எ-பிரெண்ட் லைப்-லைன் பயன்படுத்தியுள்ளார். பிறகு, சீனா என்ற பதிலை பதிவு செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நடைப்பெற்ற சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டுள்ளது. எளிதான கேள்விக்கு இரண்டு லைப்-லைன்கள் பயன்படுத்திய போட்டியாளரை நெட்டிசன்கள் கேலி செய்துள்ளனர்.

“போட்டியில் லைப்-லைன்கள் பயன்படுத்துவது என்னுடைய விருப்பம்” என்று கேலி பேச்சுக்களுக்கு சு-அய்ஹான் பதிலளித்துள்ளார். எனினும், போட்டியின் அடுத்த கேள்விக்கு தவறாக பதிலளித்த சு-அய்ஹான் போட்டியில் இருந்து வெளியேறினார்.

8,000 கிலோமீட்டர் தொலைவுள்ள சீனப் பெருஞ் சுவர், கி.மு 3 ஆம் நூற்றாண்டில், மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.