This Article is From Jun 05, 2018

குட்டிக்கரணம் அடித்த எஃப்பிஐ அதிகாரி: தவறிய துப்பாக்கி சுட்டதில் ஒருவர் காயம்!

ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அசத்தல் நடனம் ஆடியுள்ளார்

குட்டிக்கரணம் அடித்த எஃப்பிஐ அதிகாரி: தவறிய துப்பாக்கி சுட்டதில் ஒருவர் காயம்!

The man was an off-duty FBI agent, according to the Denver Police Department.

ஹைலைட்ஸ்

  • பாக்கெட்டில் துப்பாக்கியுடன் நடனமாடிய எஃப்.பி.ஐ அதிகாரி
  • தவறிவிழுந்து எதிரில் இருந்த நபரை துளைத்தது
  • எஃப்.பி.ஐ அதிகாரி பற்றி காவல்துறை விசாரணை
அமெரிக்காவின் கொலாராடியோ மாகாணத்தில் உள்ள டென்வர் பகுதியில் உள்ள ஒரு பாரில், நடு இரவுக் கொண்டாட்டம் நடந்தது. ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அசத்தல் நடனம் ஆடியுள்ளார்.

பார்வையாளர்கள் பலரையும் தன் வசம் இழுத்த அந்த வாலிபர் அதிரடியான பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியபடியே இருந்தார். பார்வையாளர்கள் ஆரவாரத்தால் உற்சாகமான அந்த வாலிபர் அடுத்து தனது நடனத்தின் ஒரு பகுதியாக ஒரு குட்டிக்கரணம் அடித்தார். அந்த நேரத்தில் அவரது பின் பக்க பாக்கெட்டிலிருந்து துப்பாக்கி ஒன்று நழுவி விழுந்துள்ளது.

இதை சற்றும் எதிர்பாராத பார்வையாளர்கள் பயத்தில் நடுங்க, அடுத்த நொடியே தன் துப்பாக்கியை எடுக்க முயன்றார் அந்த வாலிபர். ஆனால், கண் இமைக்கும் நொடியில் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா, எதிரில் இருந்த நபரின் இடது காலை துளைத்தது.



இதையடுத்து உடனடியாகத் தன் துப்பாக்கியை பாக்கெட்டில் வைத்துவிட்டு கைகள் இரண்டையும் தூக்கியவாறு அந்த வாலிபர் நடன அரங்கை விட்டு வெளியேறிவிட்டார். காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குப் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும் அவர் நலமுடன் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

விசாரணையில் துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒரு எஃப்பிஐ அதிகாரி என்றும் அவர் மீதான விசாரணையை காவல்துறை தொடர்ந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
.