Read in English
This Article is From Oct 30, 2018

குடியரசு தின விழாவில் டர்ம்ப கலந்து கொள்வதில் தொடரும் சிக்கல்..!

Republic Day Parade: ட்ரம்பை (Donald Trump) இந்திய குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த ஆண்டு தொடக்கத்தில் அழைத்தது இந்திய அரசு

Advertisement
இந்தியா ,

Highlights

  • ட்ரம்புக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார்
  • இந்த ஆண்டு தொடக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளது
  • ட்ரம்ப் பயணம் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை
New Delhi:

வரும் ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் (Republic Day Parade) பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு (President Donald Trump) இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இந்த அழைப்பை ட்ரம்ப் தற்போது புறக்கணித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசு தரப்பு முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளது. 

ட்ரம்பை (Donald Trump) இந்திய குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த ஆண்டு தொடக்கத்தில் அழைத்தது இந்திய அரசு. 

இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரிடம் நாம் தொடர்பு கொண்டோம், ‘ஜனவரி 26, 2019-ல் நடக்க உள்ள இந்திய குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அதிபர் ட்ரம்புக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த மரியாதை நிமித்தமான அழைப்பை அடுத்து, இந்தியாவுக்கு வர அதிபர் ட்ரம்புக்கு மகிழ்ச்சியே. அதே நேரத்தில் அவரது பயண அட்டவனையில் நேரமின்மை காரணமாக, பயணம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை' என்று கூறினார். 

Advertisement

மேலும் அவர், ‘பிரதமர் மோடியுடனான நல்லுறவைப் பேண அதிபர் ட்ரம்ப் ஆர்வமாக உள்ளார். அவருடன் சீக்கிரமே தொடர்பு கொண்டு பேசுவார்' என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் கேட்டபோது, ‘அதிபரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெள்ளை மாளிகை தான் பதில் தர வேண்டும்' என்று சொல்லிவிட்டது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமிருந்தும் இந்த விஷயம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. 

Advertisement

கடந்த சில ஆண்டுகளாக, இந்திய அரசு, உலக தலைவர்களை குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபராக இருந்த பாராக் ஒபாமா, குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஆயுதங்களை வாங்கும் ஒப்பந்தத்தை சமீபத்தில் இறுதி செய்தது. இதற்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்கா, இந்தியாவின் அழைப்புக்கு சரிவர பதில் அளிக்காதது கவனம் பெற்றுள்ளது.

Advertisement