Read in English
This Article is From Sep 15, 2020

நீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? 13 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம்: முதல்வர் ஆவேசம்!

நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
தமிழ்நாடு Written by

3 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம்

நீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? 13 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மூன்று நாட்கள் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது.

இந்நிலையில் நீட் தற்கொலைகள் குறித்து திமுக கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் ஆவேசமடைந்த முதல்வர் பழனிசாமி, நீட் தேர்வு யார் ஆட்சியில் எப்போது கொண்டுவரப்பட்டது? பதில் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார் மேலும், நீட் தேர்வுக்கு எதிரான நீதிமன்றம் சென்று தடை வாங்கிய அரசு அம்மாவின் அரசுதான் என்றும், திமுக, காங்கிரஸ் கூட்டணிதான் நீட் தேர்வுக்கு காரணம். எனவே திமுகதான் 13 மாணவர்களின் உயிரிழப்பிற்கு பொறுப்பு என முதல்வர் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

முன்னதாக நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்னாள் குடியரசு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement