This Article is From Aug 22, 2020

கொரோனா வைரஸ் நெருக்கடியை 2 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும்; WHO நம்பிக்கை!!

COVID-19 தொற்றுநோய் இன்றுவரை கிட்டத்தட்ட 800,000 மக்களைக் கொன்றது மற்றும் உலகளவில் 23 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியை 2 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும்; WHO நம்பிக்கை!!

1918 ஸ்பானிஷ் காய்ச்சலைக் காட்டிலும் குறுகிய காலத்தில் இதை முடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று WHO தலைவர் கூறினார்.

Geneva:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2 கோடியை கடந்துள்ள நிலையில், உலகம் இரண்டு ஆண்டுகளுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து விடுபடும் என உலக சுகாதார நிறுவனம் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

1918-ல் தோன்றிய கொடிய நோயான ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல் போல கொரோனா தொற்று நீட்டிக்காது என்றும், தற்போது உள்ள மிகச் சிறந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் இரண்டு ஆண்டுக்குள் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என நம்புவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனிவாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய காலத்துடன் ஒப்பிடும்போது, ​​உலகம் இன்று உலகமயமாக்கல், நெருக்கம், போக்குவரத்து தொடர்பு காரணமாக கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் உலகம் முழுவதும் பரவியுள்ளதை ஒப்புக்கொள்வதாகவும் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

மேலும், தற்போது நம்மிடம் உள்ள தடுப்பு நடவடிக்கைகள் மூலமாகவும் தடுப்பூசிகள் மூலம் ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல் போல பாதிப்பை கொரோனா வைரஸ் நோய் ஏற்படுத்தாமல் தடுத்துவிட முடியும் என அவர் கூறியுள்ளார்.

COVID-19 தொற்றுநோய் இன்றுவரை கிட்டத்தட்ட 800,000 மக்களைக் கொன்றது மற்றும் உலகளவில் 23 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.

ஆனால் நவீன வரலாற்றில் மிக மோசமான தொற்றுநோயான ஸ்பானிஷ் காய்ச்சல் 50 மில்லியன் மக்களை இதுவரை கொன்றுள்ளது. பிப்ரவரி 1918க்கும் ஏப்ரல் 2020 க்கும் இடையில் உலகம் முழுவதும் சுமார் 500 மில்லியன் மக்களை பாதித்துள்ளது.

முதலாம் உலகப் போரில் இருந்ததை விட ஐந்து மடங்கு அதிகமான மக்கள் ஸ்பானிஷ் ப்ளூ காரணமாக உயிரிழந்துள்ளனர். மூன்று அலைகளாக ஏற்படுத்திய இந்த நோய் தொற்று 1918 இன் பிற்பகுதியில் தொடங்கியது.

“நோய்க்கு ஆளாகும் பெரும்பாலான நபர்களுக்கு இந்த நோய் மூன்று அலைகளாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது” என்று WHO அவசரநிலை தலைவர் மைக்கேல் ரியான் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். மேலும், “மிக பெரும்பாலும், தொற்று வைரஸ் காலப்போக்கில் ஒரு பருவகால வடிவத்தில் நிலைபெறுகிறது” என ரியான் கூறியுள்ளார்.

.