This Article is From Dec 24, 2018

மு.க.ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யாரு இருக்க முடியும்? பொன்னார் கேள்வி

மு.க.ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யாரு இருக்க முடியும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மு.க.ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யாரு இருக்க முடியும்? பொன்னார் கேள்வி

மு.க.ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யாரு இருக்க முடியும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஒரு பிரதமர் வேட்பாளரை ஸ்டாலின் அறிவிக்க போகிறார் என்பது எனக்கு தெரிந்து, இரண்டாம் கட்ட தலைவர்கள் யாருக்கும் தெரியாது. ஆந்திர மாநில முதல்வர், கேரள மாநில முதல்வர் என யாரும் கைதட்டவில்லை. புதுச்சேரி முதல்வர் மட்டுமே கைதட்டினார். அவரும் எதற்கு தட்டினார் என்று தெரியவில்லை.

ஸ்டாலின் அறிவித்த உடனே எங்களுக்கு அதில் உடன்பாடில்லை என கூட்டணி கட்சிகள் தெரிவித்துவிட்டன. கூட்டணி என்பது இரண்டாவது விஷயம், ஆனால் இது கூட்டி வைத்து கழுத்தை அறுத்தது போன்றது என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது புலியை பார்த்து பூனை சூடுபோட்டது போன்றதாக தான் நான் கருதுகிறேன் என்றார்.

சாடிஸ்ட் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும்? கொலைகார கூட்டத்தை கூட்டி வைத்து அவர்களை பெருமைபடுத்துவது போன்ற ஒரு தோற்றத்தை காட்டி விட்டு சாடிஸ்ட் என்று கூறுகிறார் என்றால் இவர் தான் சாடிஸ்ட். இவரை விட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும் என்று அவர் கூறினார்.

.