This Article is From Sep 25, 2018

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி - சொத்து விவரம் வெளியீடு

தொடர்ந்து 7-வது ஆண்டாக இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ( Mukesh Ambani ) பெற்றுள்ளார்.

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி - சொத்து விவரம் வெளியீடு

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி

Mumbai:

இந்தியாவில் ரூ. 1,000 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களின் பட்டியலை பார்க்லேஸ் ஹுருன் (Barclays Hurun) வெளியிட்டு வருகிறது. இதில் 2018-ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் லிமிட்டெட்டின் தலைவர் முகேஷ் அம்பானி ( Mukesh Ambani )  முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 3,71,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஹிந்துஜா குழுமம் உள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ. 1,59,000 கோடி. இதேபோன்று ஆர்சிலார் மிட்டல் குழுமம் ரூ. 1,14,500 கோடி மதிப்புடன் 3-ம் இடத்தில் உள்ளது.

ரூ. 96,100 கோடி சொத்து மதிப்புடன் விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி 4-வது இடத்திலும், ரூ. 89,700 கோடி சொத்து மதிப்புடன் சன் ஃபார்மா நிறுவனத்தின் திலீப் சங்கவி 5-வது இடதிலும், ரூ. 78,600 கோடி சொத்து மதிப்புடன் கோட்டக் மஹிந்திரா வங்கி 6-வது இடத்திலும் உள்ளனர்.

7-வது இடத்தில் சீரம் நிறுவன தலைவர் சைரஸ் பூனவாலா (ரூ. 73,000 கோடி), 8-வது இடத்தில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி (ரூ. 71,200 கோடி), 9-வது இடத்தில் சைரஸ் மிஸ்திரி (ரூ. 69,400 கோடி) ஆகியோர் உள்ளனர்.

.