நேற்று துவங்கியது இந்த ட்விட்டர் ஆர்ப்பாட்டம். சாதாரனமாக, ஒரு சிவில் இஞ்சினியரிங் முகநூல் பக்கத்தில் ஒரு கமெண்ட்டில் துவங்கி இந்த '#Pray_For_Nesamani' ஹேஸ்டேக், விடிவதற்குள் உலக ட்ரெண்டிங். இந்த நிலை பல மணி நேரங்கள் நீடித்தது. உலக ட்ரெண்டிங்கில் டாப் 10, இந்தியாவில் டாப் ட்ரெண்ட், தமிழகத்திலும் இதே நிலைதான். இன்னும் டாப் 10 ட்ரெண்டிங்கில் நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவே மோடியின் பதவியேற்ப்பை பற்றி பேசிக்கொண்டிருக்க, ஆனால் தமிழகமே, நேசமணியை ட்ரெண்டாக்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் தமிழகம் மட்டும் அப்படி ஒரு நிலையில் இல்லை, கேரளாவில் லாசர் எலயப்பனை பற்றி பேசி அவரை ட்ரெண்டாக்கிக் கொண்டுள்ளனர். யார் இந்த லாசர் எலயப்பன்?
தமிழில், ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் 2001-ஆம் ஆண்டு வெளியானது. இதில், இடம் பெற்றிருக்கும் காண்ட்ராக்டர் கதாப்பாத்திரம் தான் இந்த நேசமணி. இந்த கதாப்பாத்திரத்தை வைகைபுயல் வடிவேலு ஏற்று நடித்தார். முன்னதாகவே வெளியான இந்த படத்தின் மலையாள வெர்சன், 1999-ஆம் ஆண்டே வெளியானது. அந்த படத்தில் வரும் காண்ட்ராக்டர் கதாப்பாத்திரத்தின் பெயர் தான் இந்த லாசர் எலயப்பன். சுருக்கமாக சொன்னால், நேசமணிக்கு முன் பிறந்த காண்ட்ராக்டர் கதாப்பாத்திரம் தான் இந்த லாசர் எலயப்பன்.
மலையாளத்தில் 1999-ஆம் ஆண்டே வெளியான இந்த 'ஃப்ரண்ட்ஸ்' திரைப்படத்தில், காண்ட்ராக்டர் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தவர் மலையாள நடிகரான ஜெகதி ஸ்ரீகுமார். தற்போது இவருடைய புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுட்டு வரும் நெட்டிசன்கள், '#Pray_For_Nesamani' போலவே '#Pray_for_LasarElayappan' என்ற ஹேஸ்டேக்கை உபயோகப்படுத்தி பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அதில் சில பதிவுகள் இதோ!
மலையாள காண்ட்ராக்டர் லாசர் எலயப்பனுக்கு நேர்ந்த சம்பவம் இதுதான்!
தமிழகமும் கேரளுமும் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுபோலவே சிந்திக்கிறது. முன்பு தேர்தலில், தற்போது ட்விட்டரில்!