Read in English
This Article is From Jun 30, 2018

காங்கிரஸ் - மஜத இடையில் குழப்பமா..?- சித்தராமையா விளக்கம்

கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருவதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது

Advertisement
இந்தியா

Highlights

  • கூட்டணி வலுவாக உள்ளது, சித்தராமையா விளக்கம்
  • இந்த அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும், முதல்வர் குமாரசாமி
  • அரசு வெகு நாளைக்குத் தாக்குப் பிடிக்காது, எடியூரப்பா
Bengaluru:

கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருவதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தக் குழப்பத்துக்குக் காரணம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியான இரண்டு வீடியோக்களால் தான். இரண்டு வீடியோக்களிலும் சித்தராமையா சில கருத்துகளை சொல்ல அது பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

முதல் வீடியோவில் சித்தராமையா, ‘இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் என் தலைமையிலான அரசு பட்ஜெட் ஒன்றை சமர்பித்தது. இந்நிலையில், மீண்டும் புதிதாக ஒரு பட்ஜெட்டை அடுத்த வாரம் சமர்பிக்க என்ன அவசியம்’ என்று நொந்து கொள்வது போன்று ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.

இரண்டாவதில், ‘இந்த அரசு இன்னும் எத்தனை நாளைக்கு நிலைக்குமோ?’ போன்ற கருத்துகளை கூறியுள்ளார். 

இரண்டு நாட்களாக இது குறித்து பேசாமல் இருந்த சித்தராமையா, ‘நான் இந்தக் கூட்டணி குறித்து மகிழ்ச்சியாக இல்லை என்று யார் சொன்னார்? நான் என்ன கண்ணோட்டத்தில் அந்தக் கருத்துகளை சொன்னேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அது யாருக்கும் தெரியாது. மதவாத பாஜக ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நாங்கள் இருவரும் கூட்டணி அமைத்தோம். எனவே இந்தக் கூட்டணி தொடரும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்’ என்று கடுகடுத்துள்ளார். 

இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி, ‘இந்த முழு பிரச்னையையும் கர்நாடக ஊடகங்கள் உருவாக்கியவை. எங்கள் அரசாங்கள் முழுசாக 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும்’ என்றுள்ளார் தீர்க்கமாக.

ஆனால், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா, ‘இந்த அரசாங்கம் வெகு நாளைக்கு நிலைத்து நிற்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை’ என்றுள்ளார். 

Advertisement