This Article is From Apr 26, 2020

கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தினை தடுத்தால் ஓராண்டு சிறை!

நோயினால் (Notified disease) உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்ணியமான முறையில் அடக்கம்/தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும் தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையான தண்டனை வழங்கும் நோக்கில் அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தினை தடுத்தால் ஓராண்டு சிறை!

நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்ட சென்ற போது மக்கள் சிலர் கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும் என்ற அச்சத்தில், மருத்துவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய விடாமல், தடுத்து நிறுத்தியதோடு, அவரைக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தினர்.

அப்பகுதி மக்கள் மருத்துவர் சைமனின் உடலுடன் வந்தவர்கள் மீது கற்கள், பாட்டில்களையும் வீசி தாக்கியுள்ளனர். இதில், ஆம்புலன்ஸ் ஒட்டுநருடன், சில சுகாதாரத்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் போலீசாரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து, இரண்டு மயானங்களிலும் அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிலரே, மருத்துவர் சைமனின் உடலை வேலாங்காட்டு கல்லறையில், கையாள் மண் அள்ளிப் போட்டு மூடியுள்ளனர்.

இச்சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தினை தடுத்தால் ஓராண்டு சிறை என தற்போது தமிழக அரசு அவசர சட்டத்தினை பிறப்பித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில்…

தமிழ்நாடு அரசினால் அறிவிக்கை செய்யப்பட்ட நோயினால் (Notified disease) உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்ணியமான முறையில் அடக்கம்/தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும் தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையான தண்டனை வழங்கும் நோக்கில் அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த அவசரச் சட்டத்தின்படி, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம்/தகனம் செய்வதைத் தடுப்பதும், தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 பிரிவு-74ன்படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என தமிழக அரசின் செய்யதிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.