ஹைலைட்ஸ்
- மோடி தலைமையிலான இந்திய அரசு, ஆயுஷ்மன் பாரத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது
- சீக்கிரமே இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் மாநாடு நடக்க உள்ளது
- இது குறித்து நட்டா உலக சுகாதார அமைப்பின் குழு முன்னிலை பேசியுள்ளார்
Geneva:
சுகாதாரம் குறித்து இந்தியா செய்யப்ப போகும் `டிஜிட்டல் ஹெல்த் இனீஷியேட்டிவ்' திட்டத்தை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்டு, பின்பற்றப் போகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நட்டா உலக சுகாதார அமைப்பின் குழு முன்னிலையில் கூறுகையில், `இந்தியா முன்னெடுத்துள்ள டிஜிட்டல் சுகாதார திட்டத்தை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொள்ளப் போகிறது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார். அவர் மேலும், `டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சுகாதாரத்தை பெரும் அளவு உயர்த்த முடியும். எனவே, இந்திய கட்டமைத்துள்ள டிஜிட்டல் முன்னெடுப்பு உலக நாடுகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.
சீக்கிரமே இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் மாநாடு நடக்கும் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
யூனிவர்சல் ஹெல்த் கேர் பற்றி பேசிய நட்டா, `UHC-யை முன்னெடுத்துச் செல்ல இந்திய அரசு மிகவும் முனைப்போடு இருக்கிறது. நாங்கள் போலியோவை ஒழித்தோம். அது போலவே மற்ற நோய்களிலும் செயல்படுவோம். இது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்வோம்' என்று விளக்கினார்.
இந்த யுனிவர்சல் ஹெல்த் கேரில், பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்பது குறித்து பேசிய நட்டா, `UHC-யை திறம்பட செயல்படுத்த நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, `ஆயுஷ்மன் பாரத்' போன்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்' என்று விளக்கினார்.