தென்னகத்தின் பிரதானமான தொழில் நகரம் கோயம்புத்தூர். சிறு, குறு தொழில்கள், பஞ்சாலைகள், இன்ஜினியரங், நகை தொழில் என தொழில்களின் கூட்டுத் தொகுப்பாக நிறைந்த பகுதி கோவை.
பாஜக நடைமுறைப்படுத்திய ஜிஎஸ்டி முறையால் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு தொழில்களின் வாழ்வாதாரம் நசுங்கியதாக பலரும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இதனால் பாஜக கட்சி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றிக்கு சவாலாக மாறியுள்ளது.
கோவை தொகுதில் ஒரு லட்சம் முஸ்லீம் வாக்காளர்களும் 50,000 கிறிஸ்தவ வாக்காளர்களும் உள்ளனர். மலையாளிகள் கணிசமாக உள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் அதிமுகவுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் கட்டமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர் நடராஜனுக்கு அதிக வாக்குகளை பெற்று தரும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.