This Article is From Apr 14, 2019

''மோடி பிரதமர் ஆக வேண்டுமென நாடே எதிர்பார்க்கிறது'': முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தேர்தல் பிரசாரம் முடிவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Advertisement
இந்தியா Written by

மோடி, ராகுல் போன்றோர் தமிழ் நாட்டில் பிரசாரம் செய்துள்ளனர்.

மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டுமென நாடே எதிர்பார்ப்பதாகவும், 130 கோடி மக்களை காக்கும் வலிமை மோடிக்குதான் உண்டு என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் பிரசாரம் முடிவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.


மோடி, ராகுல் போன்றோர் தமிழ் நாட்டில் பிரசாரம் செய்துள்ளனர். அடுத்த 2 நாட்களில் பிரசாரம் இன்னும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தேனியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது-

Advertisement


ஊழலைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.

கர்நாடகாவில், பேசும் ராகுல் காந்தி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என பிரசாரம் செய்கிறார். அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும்.

Advertisement

இங்கொன்றும், அங்கொன்றுமாக ராகுல் காந்தி ஏன் பேசுகிறார்?. தமிழகத்தில் ஒரே அணியில் இருக்கும் காங்கிரசும், கம்யூனிஸ்டும், கேரளாவில் எதிர் எதிரணியாக நிற்கிறது.


மோடி பிரதமர் ஆக வேண்டுமென நாடே எதிர்பார்க்கிறது. 130 கோடி இந்திய மக்களை காக்கும் வலிமை அவரிடத்தில்தான் உள்ளது. திமுக அமைத்திருக்கும் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
 

Advertisement