ஆனந்த மஹிந்திரா தனது ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படம்
மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் பல செய்திகளையும் நகைப்பூட்டும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
அப்படி, சமீபத்தில் அவர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சீனாவில் உள்ள ஒரு குழந்தை செய்த அட்டூழியம் தான் அது. தன் தந்தையின் பாஸ்போர்ட்டில் தனது ஓவிய திறமையை வெளிப்படுத்தியுள்ளது அந்த சுட்டி குழந்தை. இது 2014 ஆம் ஆண்டு வைரலாகியது. இதை தற்போது மறுபடியும் ஆனந்த மஹிந்திரா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
‘எனக்கு சுட்டித்தனம் செய்யும் பேரன் ஒருவன் இருக்கிறான். அவனிடமிருந்து பாஸ்போர்ட்டை பாதுகாக்க வேண்டும் என இந்த புகைப்படம் எனக்கு செய்தி சொல்லியுள்ளது' என ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
Click for more
trending news