This Article is From Nov 23, 2018

கேரளாவிற்கு சென்று பார்வையிட்ட மோடி, தமிழகத்திற்கு ஏன் வரவில்லை? வைகோ கேள்வி

கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என வைகோ கூறியுள்ளார்.

கேரளாவிற்கு சென்று பார்வையிட்ட மோடி, தமிழகத்திற்கு ஏன் வரவில்லை? வைகோ கேள்வி

கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என வைகோ கூறியுள்ளார்.

கேரளாவிற்கு சென்று பார்வையிட்ட மோடி, தமிழகத்திற்கு ஏன் வரவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

புயல் வரப்போகிறது என்ற அறிவிப்பு வெளியான உடன், இந்த அதிமுக அரசு எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்திருந்தது. இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன். சீரமைப்பு பணிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றுகின்றனர்.

உயிரை பணயம் வைத்து மின்சார ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகிகள், தமிழக அதிகாரிகள் என்பதை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகள் நற்பெயரை பெற்றுள்ளனர்.

கேரளா மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி அங்கு சென்று பார்வையிட்டார். ஆனால் கஜா புயலினால் தமிழகம் பாதிக்கப்பட்டதை இதுவரை பார்க்க வரவில்லை.

ஏற்கனவே தானே புயல், வர்தா புயல் வீசியபோது ஏற்பட்ட இழப்பை சரி செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிவாரண தொகையில், வெறும் 5 சதவீதம் தான் வழங்கப்பட்டது. அதுபோல, கஜா புயல் நிவாரண தொகையாக ரூ.15 ஆயிரம் கோடியை தமிழக அரசு கேட்டுள்ளது. ஆனால், இதில் வெறும் 4 சதவீதம் தான் மத்திய அரசு வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

.