This Article is From Aug 17, 2018

தமிழ் பெண்மனி காலில் விழுந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்!

வாஜ்பாய் மதுரை மாவட்டம் பில்லுச்சேரியை சேர்ந்த சின்னப்பிள்ளையின் சமுக சேவையை பாராட்டி விருது விழாவின் போது அவரது காலில் விழுந்து வணங்கினார்

தமிழ் பெண்மனி காலில் விழுந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்!

முன்னாள் பிரதமரும் பாஜாகாவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டம் பில்லுச்சேரியை சேர்ந்த சின்னப்பிள்ளையின் சமுக சேவையை பாராட்டி விருது விழாவின் போது அவரது காலில் விழுந்து வணங்கினார்.

2000 ஆம் ஆண்டு, களஞ்சியம் அறக்கட்டளை தலைவராக இருந்து சமுக சேவை செய்ததற்காக ஸ்ரீ சக்தி புரஷ்கார் விருதை பெற்ற போது, அன்றைய பிரதமர் வாஜ்பாய் சின்னப்பிள்ளையின் காலில் விழுந்த பின்பு இந்தியா முழுவதும் அவரை கவனிக்கத் தொடங்கியது.

மது ஒழிப்பு , பெண்களின் முன்னேற்றம் போன்ற சமுக முன்னேற்றத்திற்காக போராடிய சின்னப்பிள்ளைக்கு தற்போது 66 வயதாகிறது. 18 வருடங்களுக்கு முன்னர் தன் முதல் விருதின் போது பிரதமர் வாஜ்பாய் காலில் விழுந்த நேரத்தில், ‘படிப்பறிவுக் கூட இல்லாத கிராமத்திலிருந்து வந்த பெண்மனியின் காலில் விழுகிறாரே என்று தன் உடபெல்லாம் நடுநடுங்கி விட்டதாக குரல் நடுக்கத்துடன் கூறுகிறார்,’ சின்னப்பிள்ளை. இந்த விருதிற்கு பின்னர், கருணாநிதி நமது நாட்டு பெண்ணை அங்கிகரிக்க வேண்டுமென்பதற்காக முரசொலி விருதை சின்னப்பிள்ளைக்கு வழங்கினார்.

‘என்னை அங்கிகரித்த இருவருமே தற்போது இந்த உலகில் இல்லை என்பதை நினைக்கும் போது வருத்தமாகயிருக்கிறது.நேற்று மாலை வாஜ்பாயின் இறப்பு செய்தியைக் கேட்டதிலிருந்து தனக்கு சாப்பாடு தூக்கம் எதுவுமேயில்லை என்று கூறும் அவர். அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ளக் கூட முடியவில்லை என்பது தான் தனக்கு மிகுந்த துக்கமாக இருக்கிறது என்று கண்ணீர் மலுங்க கூறுகிறார்’ சின்னப்பிள்ளை.

பல விருதுகளைப் பெற்ற சின்னப்பிள்ளை சமீபத்தில் தமிழ்நாட்டு அரசின் ஔவையார் விருதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து பெற்றார். தற்போதும் சமுக முன்னேற்றதிற்காக குரல் கொடுத்து வரும் அவர் பெண்கள் இந்த சமுகத்தில் சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்பது தான் தன் கனவு என்று கூறுகிறார் கிராமத்தை சேர்ந்த இந்த சமுகப் போராளி.

- மோனிகா பரசுராமன்

.