This Article is From Jan 12, 2019

கொடநாடு விவகாரத்தில் தினகரன் மவுனம் காப்பது ஏன்? திவாகரன் கேள்வி

அனைத்துக்கும் முந்திக்கொண்டு முந்திரிக்கொட்டை போல் பதிலளிக்கும் டிடிவி தினகரன் கொடநாடு விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என திவாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொடநாடு விவகாரத்தில் தினகரன் மவுனம் காப்பது ஏன்? திவாகரன் கேள்வி

அனைத்துக்கும் முந்திக்கொண்டு முந்திரிக்கொட்டை போல் பதிலளிக்கும் டிடிவி தினகரன் கொடநாடு விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என திவாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களா தொடா்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கொடநாடு எஸ்டேட்டில் தொடர்ச்சியாக நடந்த கொலை சம்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் காரணம் என பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன்,

கொடநாடு விவகாரத்தை சிபிஐ-யிடம் ஒப்படைக்கலாம். தொடர்ந்து ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டு வருகின்றனர். இதில் பலர் சம்மந்தப்பட்டு இருக்கலாம் என கூறும்போது, இதில் பெரும் சிக்கல்கள் உள்ளது.

அனைத்துக்கும் முந்திக்கொண்டு, முந்திரிக்கொட்டை போல் பதிலளிக்கும் டிடிவி தினகரன் கொடநாடு விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? என்பது தெரியவில்லை. ஒருவேளை வீடியோ வெளியான அதிர்ச்சியில் கூட டிடிவி தினகரன் இருக்கலாம்.

மீண்டும் ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் முகத்தை காட்டி ஓட்டு கேட்க 100 கோடி செலவு செய்யப்பட்டது உண்மை. 20 ரூபாய் டோக்கனை கொடுக்காவிட்டால் டிடிவி தினகரன் தோல்வி அடைந்து இருப்பார்.

20 ரூபாய் டோக்கன் கொடுத்தே அவர் வெற்றி பெற்றார். சுயேச்சையாக ஜெயித்தவர்கள் எல்லாம் முதல்வராக வரவேண்டும் என்றால் முடியுமா? அதெல்லாம் நடக்கும் காரியமா? என்று அவர் கூறினார்.
 

.