This Article is From Apr 09, 2020

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த எச்.ராஜா- காரணம் என்ன?

முன்னதாக மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொள்ளாவிட்டால் "பதிலடி கொடுக்கப்படும்” என்று டிரம்ப் எச்சரித்திருந்தார்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த எச்.ராஜா- காரணம் என்ன?

மத்திய அரசு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்வதைச் சமீபத்தில் தடைசெய்திருந்தது.

ஹைலைட்ஸ்

  • அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட்டினார்
  • கொரோனா மருந்து ஏற்றுமதி செய்ததற்கு மோடிக்கு நன்றி தெரிவித்தார் டிரம்ப்
  • டிரம்பின் இந்த ட்வீட்டைத்தான் ராஜா, ரீ-ட்வீட் செய்தார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ட்விட்டர் பதிவை, பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா ரீ-ட்வீட் செய்துள்ளார். 

சர்வதேச அளவில் கொரோனா தொற்று மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா, உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியிடம் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து மத்திய அரசு, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்வதை உறுதி செய்தது.

இதையடுத்து டிரம்ப், “அசாதாரண நேரங்களில் நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவி மறக்கப்பட மாட்டாது. உறுதியான தலைமை கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக்க நன்றி. இந்தப் போராட்டத்தில் நீங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மொத்த மனித குலத்திற்கும் உதவி செய்துள்ளீர்கள்,” என அமெரிக்க ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொள்ளாவிட்டால் "பதிலடி கொடுப்படும்” என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். மத்திய அரசு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்வதைச் சமீபத்தில் தடைசெய்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க மற்றும் இதர நாடுகளிலிருந்து அதிகரித்து வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தேவைக்கான கோரிக்கை காரணமாக கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, அதை ஏற்றுமதியை மத்திய அரசு அனுமதித்துள்ளது.

டிரம்பின், இந்த நன்றி தெரிவிக்கும் ட்வீட்டை, தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பதிவிட்ட எச்.ராஜா, “தமிழகத்தின் presstitutes-கள் பார்வைக்கு” என்று கருத்திட்டுள்ளார். presstitutes என்று ராஜா குறிப்பிடுவது, உள்நோக்கம் கொண்டு செய்தி வெளியிடும் நபர்களைக் குறிப்பதாகும்.

.