சென்னை மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராப்ர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர்.
சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய கடந்த செட்பம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை முடிவு செய்திருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் (Mutharasan), மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுவிக்கும் வழக்கில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், 7 பேரின் விடுதலையை ஆளுநர் மூலமாக தடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தாமதமின்றி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)