பெண் புலியை அந்தக் கிராம மக்கள் துரத்திச் சென்று கொன்றனர். வனத்துறையினரையும் தாக்கியுள்ளனர்.
Lucknow: உத்திர பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் சென்ற ஞாயிறன்று ஒருவரை பெண்புலி ஒன்று கடித்தது. அந்தப் புலியை அங்குள்ளவர்கள் கொன்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி இறந்தார். கடந்த வாரம் ஆவ்னி எனும் புலி பொது மக்களால் கொள்ளப்பட்டது. அது, கடந்த 2 வருடங்களில் மட்டும் 13 பேரை மஹாராஷ்டரா காட்டுப்பகுதிகளில் கொன்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
50 வயது முதியவரை லக்னோவிலிருந்து 210 கிமீ தொலைவில் உள்ள புலிகள் பாதுகாப்பு பகுதியில் இந்த புலி தாக்கியது. அதனை விரட்டிவந்த பொதுமக்கள் வனப்பாதுகாவலர்களை தாக்கிவிட்டு 10 வயதான இந்த புலியை தடியால் கடுமையாக தாக்கினர்.
கிராம மக்கள் புலிகள் நடமாடும் வனப்பகுதிக்குள் ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுள்ளனர், கடந்த 10 ஆண்டுகளாக இந்த புலி யாரையும் தாக்கியதில்லை. இப்போது இந்தப் புலியை கொன்றதற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்,
கிராம மக்கள் இந்த புலி குறித்து வனத்துறையினரிடம் அதிக முறை புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளனர். இந்தியாவில் இப்படி புலிகள் கொல்லப்படுவது இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக பதிவாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர், மேனகா காந்தி இது ஒரு மோசமான மரணம். இதுபற்றி விசாரிக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
2014ம் ஆண்டு புலிகள் அறிக்கையின்படி 2226 புலிகள் தான் இந்தியாவில் இருப்பதாக கணெக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் புலிகள் எண்ணிக்கை குறைவது கவலை அளிப்பதாகவும் தேசிய சர்வே தெரிவிக்கிறது.