Read in English বাংলায় পড়ুন
This Article is From Jul 30, 2019

மழை நீரை சேமிக்கத் திணறும் சென்னை… காரணம் என்ன?- விரிவான அலசல்

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம், நகருக்கு அளித்து வந்த நீரில் 40 சதவிகிதத்தைக் குறைத்தது.

Advertisement
Chennai Written by , Translated By
Chennai:

தமிழக தலைநகர் சென்னையில் தொடர்ந்து மழை பொழிவு இருந்தாலும், நகரத்தின் தண்ணீர் பஞ்சத்துக்குக் காரணம் மழை நீர் சேகரிப்புத் திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததே என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் உயிர்ப்போடு இருந்த மழை நீர் சேகரிப்புத் திட்டம், தற்போது சுணக்கம் அடைந்துவிட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது. கான்க்ரீட் காடாக இருக்கும் சென்னையின் கட்டுமானங்களால் நிலைமை இன்னும் மோசமாக மாறியுள்ளதாம். 

மைலாப்பூரில் இருக்கும் அம்புஜம், தனது அடுக்குமாடிக் கட்டடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொய்வடைந்து கிடக்கும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் சரிபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்த மழை நீர் சேகரிப்புத் திட்டத்தால், நன்னீர் சேமிப்பு என்பதே அவரது அடுக்குமாடி கட்டடத்தில் இருக்கவில்லை. 

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம், நகருக்கு அளித்து வந்த நீரில் 40 சதவிகிதத்தைக் குறைத்தது. இதனால், நகரின் நீர் தட்டுப்பாடு மேலும் அதிகரித்தது.

Advertisement

16 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, மாநிலத்தில் இருக்கும் அனைத்து கட்டடங்களும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது வீரியமாக செயல்படுத்தப்பட்ட அந்தத் திட்டம் மூலம், நிலத்தடி நீர் 4 மீட்டர் வரை உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆனால், அதை தொடர்ந்து கண்காணிக்காமல் விட்ட அரசு அமைப்புகள் மற்றும் முறையான பரமாரிப்பு செய்யாமல் விட்ட வீட்டு உரிமையாளர்களால், மழை நீர் சேகரிப்புத் திட்டம் பெயரளவுக்குத்தான் பல இடங்களில் இருக்கின்றன. இந்த சீர்குலைவு சென்னையில் நீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள். 

Advertisement

மழை நீர் சேகரிப்புக்காக பணி செய்து வரும் ரெயின் சென்டர் அமைப்பின் இயக்குநரான டாக்டர் சேகர் ராகவன், “அரசின் சட்டத்துக்காக மக்கள் மழை நீர் சேகரிப்பைச் செய்தனர். அது மிகப் பெரிய தவறு. நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில் கழிவு நீர் வடிகால் வாயிலாக மழை நீர் கடலில் கலக்கவிடப்பட்டன. சென்னை போன்ற கடற்கரை நகரத்தில் கழிவுநீர் வடிகால் வாயிலாக மழைநீரை கலக்கவிடவே கூடாது. அது மழை நீர் சேகரிப்புக்கு எதிராக போகும்” என்று கூறுகிறார். 

சென்னையில் இருக்கும் பெரும்பான்மையான அடுக்குமாடி அபார்ட்மென்ட்ஸ் மற்றும் இல்லங்களில் மண் தரையே இல்லாத அளவுக்கு கட்டப்படுகின்றன. இதனால், மழைநீர் நிலத்தில் ஊர்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போகின்றது. கடந்த 3 வாரங்களில் மட்டும் சென்னையில் 19 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாம். ஆனால், அதில் பெரும்பான்மையான நீர், கடலில்தான் கலக்குவிடப்பட்டதாம். 

 

Advertisement