This Article is From Mar 20, 2019

மதுவிலக்கை உடனடியாக ஏன் அமல்படுத்தவில்லை?.. ராஜேந்திர பாலாஜியின் ’அடடே’ விளக்கம்!

மதுவிலக்கை உடனடியாக ஏன் அமல்படுத்தவில்லை? என்பது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

மதுவிலக்கை உடனடியாக ஏன் அமல்படுத்தவில்லை?.. ராஜேந்திர பாலாஜியின் ’அடடே’ விளக்கம்!

இதுகுறித்து விருதுநகரில் இன்று செய்தியாகளர்களை சந்தித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் மதுவிலக்கு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றவே உடனடி மதுவிலக்கு கொண்டுவரவில்லை.

ஏனென்றால், சில பேருக்கு காலை குடிக்கவில்லை என்றால் நரம்பு தளர்ச்சி வந்துவிடும், இதனால், அவர்களது உயிருக்கு ஆபத்து வந்துவிடும். அவர்களது உயிரை காப்பாற்றும் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கு. அதனால், கொஞ்சம் கொஞ்சமா மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.

தொடர்ந்து, அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் இடையே எந்தவித மோதலும் இல்லை. இந்த தேர்தல் முதல்வர் பழனிசாமியின் அரசியல் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் தேர்தலாக அமையும் என்றார்.

மேலும், கமல்ஹாசன் களத்தில் இல்லை என்றும் காணொளி காட்சி மூலம் தேர்தலை முடித்துக்கொள்வர் எனவும் கிண்டலாக தெரிவித்தார்.

.