Read in English
This Article is From Apr 16, 2019

புகையிலை பொருட்களை நிரந்தரமாக ஏன் தடைசெய்யவில்லை : தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம்

குட்கா தடை செய்வது குறித்தான பொதுநல வழக்கில்  நீதிபதி கருணாகரன் மற்றும் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் இருவரும் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரச் செயலாளர் ஆகியோரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Advertisement
தமிழ்நாடு

புற்றுநோயை உருவாக்கும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்படவேண்டுமென மனு கொடுக்கப்படிருந்தது

Madurai :

குட்கா மற்றும் பான் மசாலா மீது நிரந்தர தடை ஏன் விதிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

குட்கா தடை செய்வது குறித்தான பொதுநல வழக்கில்  நீதிபதி கருணாகரன் மற்றும் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் இருவரும் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரச் செயலாளர் ஆகியோரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 

“அரசாங்கம் ஏன் இரண்டு பொருட்களின் மீது நிரந்தர தடை விதிக்கவில்லை. மொத்தமாக தடை விதிப்பதை விடுத்து குறிப்பிட்ட காலத்திற்கு அரசாங்க உத்தரவு மட்டும் போடப்பட்டது ஏன்…?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்குப் பின் விசாரிப்பதாக நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

Advertisement

புற்றுநோயை உருவாக்கும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்படவேண்டுமென மனு கொடுக்கப்படிருந்தது. 

2013 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் புகையிலை, குட்கா பொருட்களுக்கு தடைகளை விதித்தது.ஒவ்வொரு ஆண்டும் ஒழுங்குமுறையால் இந்த தடை நீட்டிக்கப்பட்டது. 

Advertisement
Advertisement