பிரியங்கா காந்தி கடந்த ஜனவரியில் காங்கிரஸில் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்
ஹைலைட்ஸ்
- ரேபரேலியில் தொண்டர்களிடம் பிரியங்கா இதனை கூறியுள்ளார்.
- தேர்தலில் போட்டியிட தயார் என ஏற்கனவே கூறியிருந்தார்.
- உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Rae Bareli: உத்தரபிரதேச கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி அந்த மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வியாழனன்று அவர் தனது தாய் சோனியா காந்தியின் ரேபரேலியில் தொகுதயில் கட்சி தொண்டர்களை சந்தித்தார்.
அப்போது, தொண்டர்கள் அவரது தாய் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளனர். அப்போது, பிரியங்கா காந்தி நான் ஏன் வாரணாசியில் போட்டியிடக்கூடாது என தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில், பிரியங்கா காந்தி போட்டியிடவா என கிண்டலாக கேட்டது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் இதேபோல், காங்கிரஸ் கட்சி விரும்பினால் மக்களவை தேர்தலில் போட்டியிடத் தயார் என்று தனது விருப்பத்தை தெரிவித்து பரபரப்பை கிளப்பினார் பிரியங்கா காந்தி.
உத்தர பிரதேசத்திற்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்குள்ள அமேதி மக்களவை தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் போட்டியிடுகின்றனர்.
நாட்டில் ஆளும் கட்சியை தீர்மானிப்பதில் உத்தர பிரதேசம் முக்கிய பங்கை வகிக்கிறது. இங்குள்ள 80 மக்களவை தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி கிங் மேக்கராக மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
இந்த நிலையில் தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இதுவரையில் பிரசாரம் செய்து வந்த பிரியங்கா காந்தி, கடந்த மாதம் நேரடி அரசியலில் இறக்கப்பட்டார். அவருக்கு உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது கட்டுப்பாட்டில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன.