This Article is From Jan 04, 2020

விமானம் பறக்கத் தொடங்கும் போதும் தரையிறங்கும் போதும் விளக்குகள் ஏன் அணைக்கப்படுகின்றன தெரியுமா…?

விமான விளக்குகள் மங்கும்போது அல்லது அணைக்கப்படும் போது அவசரகால பாதை விளக்குகள் மற்றும் அறிகுறிகள் மட்டும் தெளிவாக தெரியும் என்கிறார்.

விமானம் பறக்கத் தொடங்கும் போதும் தரையிறங்கும் போதும் விளக்குகள் ஏன் அணைக்கப்படுகின்றன தெரியுமா…?

விமானம் தரையிறங்கும்போது கேபின் விளக்குகள் மங்கலாக இருக்கவேண்டும் என்பதும் ஒரு விதி

விமான பயணத்தின்போது பல்வேறு விதிகள் கடைபிடிக்கப்படுவது வழக்கமே. 

1920களில் இருந்தது போன்ற விமான விதிமுறைகள் இன்று இல்லையென்றாலும் விமானப் பயணத்தின் போது சில விதிகள் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக சீட் பெல்ட்களை அணிய வற்புறுத்துவதைப் போல பல விதிமுறைகள் உண்டு.

 விமானம் தரையிறங்கும்போது கேபின் விளக்குகள் மங்கலாக இருக்கவேண்டும் என்பதும் ஒரு விதி. இந்த விதி ஏன் வந்தது ஏன் அத்தனை முக்கியமானது என்று தெரிந்து கொள்வோமா…? 

விமானம் தரையிறங்கும்போது விமானம் பறக்கத் தொடங்கும் போதும் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விளக்குகளை அணைப்பது ஏன் தெரியுமா…? நம் கண்கள் இருட்டோடு சரிசெய்ய எடுத்துக் கொள்ள ஆகும் நேரம் தான் இது. இருளை சரிசெய்ய நம் கண்களுக்கு 10 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகலாம். அவசர காலத்தில் ஒரு விமானத்தை பாதுகாப்பாக வெளியேற்றும் போது இந்த சில நிமிடங்கள் பல வித்தியாசங்களை ஏற்படுத்தும். 

“ விளக்குகளை மங்கச் செய்வதால் உங்கள் கண்களை இருளை முன்கூட்டியே எதிர்நோக்க தயாராகி விடுகிறது. இதனால் சட்டென இருட்டு வரும் போது ஏற்படும் பயம் உங்களுக்கு ஏற்படாது.” என்று விமான பைலட்டும் ‘காக்பிட் ரகசியம்' என்ற புத்தகத்தின் ஆசிரியருமான பேட்ரிக் ஸ்மித் விளக்குகிறார். 

விமான விளக்குகள் மங்கும்போது அல்லது அணைக்கப்படும் போது அவசரகால பாதை விளக்குகள் மற்றும் அறிகுறிகள் மட்டும் தெளிவாக தெரியும் என்கிறார். 

விமானம் மற்றும் தரையிறங்கும்போது விளக்குகள்  அணைக்கப்படுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. பெரும்பாலான விபத்துகள் நிகழும் பொழுதுகளும் இதுதான். எனவே விமான நிறுவனங்கள் புறப்படும்போதும் தரையிறங்கும் போதும் விளக்குகளை அணைக்கின்றன.

Click for more trending news


.