Read in English
This Article is From Sep 29, 2019

UNGA கூட்டத்தில் கணியன் பூங்குன்றனாரை மேற்கோள் காட்டிய PM Modi - என்ன காரணம்..?

Kaniyan Pungundranar: சிவகங்கையில் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர் கணியன் பூங்குன்றனார். 

Advertisement
இந்தியா Edited by

தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் (Kaniyan Pungundranar), ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ என்கிற வரியை மேற்கோள் காட்டினார் Modi

United Nations:

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் (United Nations General Assembly (UNGA)) பேசிய பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi), சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்கு அவர் தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் (Kaniyan Pungundranar), ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்கிற வரியை மேற்கோள் காட்டினார். வளர்ச்சிக்காகவும் தீவிரவாதத்துக்கு எதிராகவும் போராட அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை பூங்குன்றனாரின் வரிகள் மூலம் வலியுறுத்தினார் பிரதமர் மோடி. 

ஆனால், சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ப் புலவரின் வரிகளை, ஐ.நா சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஏன் மேற்கோள் காட்டினார் என்பது குறித்து பலர் ஆச்சரியப்பட்டிருக்கலாம். அதற்குக் காரணம், அந்த வரிகளில் புதைந்துள்ள பொருள் மற்றும் நவீன உலகில் தேவைப்படும் நல்லிணக்கமும்தான் எனப்படுகிறது. 

சிவகங்கையில் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர் கணியன் பூங்குன்றனார். 

Advertisement

ஐ.நா சபையின் 74வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்திய கலாசாரம் என்பது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. எங்கள் கலாசாரத்துக்கென்று தனியாக குணாதியங்கள் இருக்கின்றன. பரந்துப்பட்ட கனவு குறித்து அது பேசியது. எல்லா உயிர்களின் மேலும் பரிவு கொண்ட எங்கள் பண்பாடு, அனைவருக்குமான நலத்தைப் பேணியது” என்றார். 

முடிவாக தீவிரவாதத்துக்கு எதிராக செயலாற்றுவது குறித்து பேசிய மோடி, “தீவிரவாதம் என்பது ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதற்கு நேரெதிர் கொள்கையைக் கொண்டது. அதற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளவுபட்ட தேசங்கள் என்பது யாருக்கும் நன்மை தராது” என்றார் தீர்க்கமாக.

Advertisement


 

Advertisement