Read in English
This Article is From Sep 13, 2019

சோனியா கூட்டிய Congress உயர்மட்ட கூட்டத்தை மிஸ் செய்த ராகுல் காந்தி - உண்மை பின்னணி என்ன?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி (Rahul Gandhi), தனது பதவியை ராஜினாமா செய்தார்

Advertisement
இந்தியா (with inputs from ANI)

பலகட்ட ஆலோசனைக்குப் பின்னர் சோனியா காந்தி, இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

Highlights

  • சோனியா காந்தி, ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்
  • காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்
  • மன்மோகன் சிங்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்
New Delhi:

காங்கிரஸ் (Congress) கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி (Sonia Gandhi) நியமிக்கப்பட்டு ஒரு மாத காலமே முடிவடைந்துள்ள நிலையில், கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில், பாஜக-வை எப்படி எதிர்ப்பது என்பது குறித்துப் பேசியுள்ளார். நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) கலந்து கொள்ளவில்லை. இது ஏன் என்ற கேள்வி டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரக்கத் தொடங்கியுள்ளன. 

இந்த உயர்மட்டச் சந்திப்பு பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், கட்சியில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் வீட்டுக்கு வீடு சென்று பிரசாரம் செய்யும் திட்டமும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, மிகப் பெரிய திட்டம் ஒன்றையும் காங்கிரஸ் தொடங்க உள்ளதாம். 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குக் கிட்டத்தட்ட 2 மாதங்கள் தலைவர் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. பலகட்ட ஆலோசனைக்குப் பின்னர் சோனியா காந்தி, இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

Advertisement

இந்நிலையில் உயர்மட்டக் கூட்டத்தில் ராகுல் கலந்துகொள்ளாததன் பின்னணி என்ன என்பது குறித்து காங்கிரஸ் தரப்பிடம் கேட்டோம், “உயர்மட்டக் கூட்டத்தில் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநில சட்டமன்றப் பொறுப்பாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேற்குறிப்பிட்டுள்ள எந்தப் பதவியிலும் ராகுல் இல்லை. அதன் காரணமாகவே, அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” என்று கூறுகிறது. அதே நேரத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

நாட்டின் பொருளாதார நிலை குறித்து கட்சியினருக்கு எடுத்துக் கூறவே மன்மோகன் அழைக்கப்பட்டதாக சொல்லும் காங்கிரஸ் தரப்பு, அந்தோணிக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் அழைப்பு என்பது குறித்து வாய் திறக்கவில்லை.

Advertisement

கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தபோதே, ‘இனி முடிவெடுக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன்' என்று ராகுல் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதன் நீட்சியாகவே, காங்கிரஸின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கூட ராகுல் காந்தி கலந்துகொள்ளாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. 


 

Advertisement