ஹைலைட்ஸ்
- தமிழக போலீஸில் கடைபிடிக்கப்படும் விதிகளுக்கு எதிராக வழக்கு போடப்பட்டது
- நீதிபதி கிருபாகரனுக்குக் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது
- வழக்கு விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Chennai: தமிழ்நாடு காவல் துறையில் வேலை செய்து வரும் காவலர்களுக்கு மற்ற அரசு ஊழியர்களைப் போல ஏன் வார விடுமுறை விடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக காவல் துறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளைக்கு எதிராக ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதபதி கிருபாகரனுக்குக் கீழ் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கிருபாகரன், ‘அனைத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமறை அளிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அரசு ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்க முடிகிறது. அதைப் போல் போலீஸாருக்கும் ஏன் ஒருநாள் விடுமுறை அளிக்கக் கூடாது. அப்படிச் செய்வதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் குறையும். இந்த விஷயம் குறித்து தமிழக அரசு சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளுடன் கலந்தோலிசித்து முடிவு எடுக்க வேண்டும். ஒருநாள் விடுமுறை அளிப்பது போலீஸாருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உதவிகரமாக இருக்கும்’ என்று கூறி, ஜூலை 12 ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
தமிழக அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதாடினார்.