Read in English
This Article is From Jun 04, 2019

‘இருக்கு… ஆனா, இல்லை!’- ஏன் சிலருக்கு கனவுகள் நியாபகத்தில் நிற்பதில்லை?

மனிதர்கள் வேகமாக உறங்கிவிட்டாலும், டக் என்று விழித்துக் கொண்டாலும் இந்த இரு ரசாயனங்களின் சுரத்தல் தாறுமாறாக இருக்கும்.

Advertisement
விசித்திரம் Edited by

நாம் உறங்கும்போது, நமது மூளை 4 வித பரிமாற்றங்களை அடையும்

இரவு தூங்கும்போது நமக்குப் பிடித்தவர்களுக்கு ‘ஸ்வீட் ட்ரீம்ஸ்' என்று மெஸேஜ் செய்துவிட்டு படுப்பது பலரின் வழக்கம். அப்படி உறங்கும் பலருக்கு கனவு வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. ஆனால், அப்படி வரும் கனவுகளை சிலரால் எவ்வளவு முயன்றும் நினைவில் நிற்கவைக்க முடியாது. கனவு வந்தது என்பதை அவர்களால் உணர முடியும். ஆனால், என்ன கனவு என்பதை நியாபகப்படுத்த முடியாது. அதற்கு என்ன காரணம் தெரியுமா..?

நாம் உறங்கும்போது, நமது மூளை 4 வித பரிமாற்றங்களை அடையும். அதில் இறுதி பரிமாற்றம்தான் ஆர்.ஈ.எம் (ராபிட் ஐ மூவ்மென்ட்). இந்த 4வது கட்டத்தில்தான் கனவு ஏற்படும். ஆர்.ஈ.எம் கட்டத்தின்போது, கண்கள் படபடவென அடித்துக்கொள்ளும். இதயத் துடிப்பு குறைவாகும். அப்போது, நமது உடல் ‘அடோனியா' என்ற இயங்கா நிலையை அடையும். அந்த நேரத்தில், நமது மூளையில் இரண்டு வித ரசாயனங்கள் சுரக்கும். 

அசிடில்கோலின் என்கிற ரசாயனம் மூலம் நமது மூளையின் செயல்பாடு பன்மடங்கு அதிகரிக்கும். அந்த ரசாயனம்தான் நாம் எப்படிப்பட்ட கனவை காண்போம் என்பதை தீர்மானிக்கும். அதேபோல நோரிபைன்ஃப்ரைன் என்கிற ரசாயனம் நமது இயக்கம் குறித்து நினைவூட்டும். அது மூளையின் செயல்பாட்டைக் குறைக்கும். நோரிபைன்ஃப்ரைன் ரசாயனம் குறைவாக சுரப்பதன் மூலம் கனவுகளில் நமக்கு உண்டாகும் அழுத்தம் குறையும். ஆனால், கனவை நியாபகப்படுத்தும் ஆற்றலும் குறையும். 

Advertisement

மனிதர்கள் வேகமாக உறங்கிவிட்டாலும், டக் என்று விழித்துக் கொண்டாலும் இந்த இரு ரசாயனங்களின் சுரத்தல் தாறுமாறாக இருக்கும். இதனால், கனவுகளை சரிவர நியாபகப்படுத்துதல் கடினமானதாக இருக்கும். சில நேரத்தில் கனவுகள் ஊக்கம் அளிக்கும் விதத்தில் இல்லாமல் இருப்பதும் அதை மறப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. 

“கனவுகள் என்பது மிகவும் மென்மையான ஒரு விஷயம். அது ஏன் அப்படி தோன்றுகிறது, ஏன் நியாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்பதை சுலபமாக சொல்லிவிட முடியாது” என்று ஹார்வர்டு ஸ்கூல் மெடிக்கல் ஆய்வாளர் ராபர்ட் ஸ்டிக்கோல்டு கூறுகிறார். 

Advertisement
Advertisement