This Article is From Nov 01, 2019

‘Sujith-ன் உடல் காட்டப்படாதது ஏன்..?’- தமிழக அரசு அளித்த விரிவான விளக்கம்!

திருச்சி (Trichy), மணப்பாறை (Manapparai) அருகே நடுக்காட்டுப்பட்டியில் (Nadukkapatti), கடந்த வெள்ளிக் கிழமை, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க சுமார் 80 மணி நேரம் போராட்டம் நடந்தது.

Advertisement
தமிழ்நாடு Written by

நேற்று சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் (Sujith) 80 மணி நேர போராட்டத்திற்கு பின் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பொதுப் பார்வைக்கு வைக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, வருவாய் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சர்ச்சையாகி வரும் இவ்விவகாரத்தைப் பற்றி விளக்கமாக பதில் அளித்துள்ளார். 

“இதைப் போன்ற விபத்து நேரங்களில் ஒருவரோ அல்லது பல உயிரிழப்புகளோ நேர்ந்து விட்டால், அதை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து விதிமுறைகள் இருக்கின்றன. அதன் அடிப்படையில்தான் சிறுவன் சுஜித்தின் உடல், பொதுப் பார்வைக்கு வைக்கப்படவில்லை,” என்று சுஜத்தின் உடல் காட்டப்படாதது குறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.

மேலும் இந்த விஷயம் பற்றி விளக்கிய அவர், “கும்பகோணம் தீ விபத்தில் நடந்த சம்பவத்தை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அப்போது தீ விபத்தில் இறந்த 75 பேரின் உடல்களை ஊடகங்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. அது மிகப் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாயின. அதேபோலத்தான், இப்போது சுஜித்தின் மரணமும். அந்த குழந்தையின் சடலத்தை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரசு, தெளிவாக வரையறுத்துள்ளது. அதன்படித்தான் நாங்கள் செயல்பட்டோம்,” என்றார். 

சுஜித் உயிருடன் மீட்க எடுத்த நடவடிக்கைகள் பற்றியும், பின்னர் இறந்துவிட்டான் என்று தெரிந்த பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “இந்த சம்பவத்தை வெளியில் இருந்து பார்த்தவர்களைவிட, பல மடங்கு முனைப்புடன் களத்தில் இருந்தவர்கள் பணியாற்றினர். அவர்களின் செயல்பாடுகள் பற்றி தயவு செய்து சந்தேகம் எழுப்ப வேண்டாம்,” என்று கோரிக்கை வைத்தார். 

திருச்சி (Trichy), மணப்பாறை (Manapparai) அருகே நடுக்காட்டுப்பட்டியில் (Nadukkapatti), கடந்த வெள்ளிக் கிழமை, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க சுமார் 80 மணி நேரம் போராட்டம் நடந்தது. இறுதியில் சுஜித்தை சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது. 

Advertisement
Advertisement