हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 08, 2019

கான்பூர் தேநீர் விற்பனையாளரை பாராட்டிய வி.வி.எஸ் லக்ஷ்மன்; காரணம் என்ன?

முகமது மஹபூப் மாலிக் சிறிய தேநீர் கடையை நடத்தி அதில் வரும் வருமானத்திலிருந்து 40 குழந்தைகளின் கல்விக்காக செலவிட்டு வருகிறார்.

Advertisement
விசித்திரம் Translated By

வருமானத்தில் 80சதவீதம் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுகிறார் முஹபூப் மாலிக்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மன் கான்பூரைச் சேர்ந்த தேநீர் விற்பனையாளரான முகமது மஹபூப் மாலிக் என்பவரை பாராட்டியுள்ளார். 

முகமது மஹபூப் மாலிக் சிறிய தேநீர் கடையை நடத்தி அதில் வரும் வருமானத்திலிருந்து 40 குழந்தைகளின் கல்விக்காக செலவிட்டு வருகிறார்.  

வி.வி.எஸ். லக்ஷ்மன் “சிறிய தேநீர் கடை மூலம் வரும் வருமானத்தில் 80சதவீதம்  குழந்தைகளின் கல்விக்காக செலவிடுகிறார்” என்று எழுதி  மஹபூப் மாலிக்கின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

Advertisement

செய்தி வலைத்தளமான ஹரிபூமி செய்திப்படி, மாலிக் உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஷர்தா நகர் பகுதியில் குழந்தைகளுக்காக பள்ளியை நடத்தி வருகிறார். 

2015இல்  தொடங்கப்பட்ட பள்ளியில் சுமார் 40 குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்குகிறது. மேலும் அவர்களின் சீருடை, எழுதுபொருள், புத்தகங்கள் போன்றவற்றுக்கும் நிதியுதவி செய்கிறது. வி.வி.எஸ். லக்‌ஷ்மனின் பதிவிற்கு பின்பு மாலிக்கிற்கு பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. 

Advertisement
Advertisement