This Article is From Nov 18, 2018

உள்ளாடை புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிரும் பெண்கள்! காரணம் என்ன தெரியுமா...?

இந்த வழக்கிற்கான நீதிபதிகள் குழுவில் 8 ஆண் நீதிபதிகளும் 4 பெண் நீதிபதிகளும் இருந்தனர். அனைவரும்  குற்றம் சாட்டப்பட்டப்பட்டவரை குற்றவாளி இல்லை என்று கூறி வழக்கிலிருந்து விடுவித்தனர்.

உள்ளாடை புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிரும் பெண்கள்! காரணம் என்ன தெரியுமா...?

பெண்கள் சமூக வலைதளங்களில் உள்ளாடை புகைப்படங்களை பகிர்ந்து, '#ThisIsNotConsent', என்கிற ஹேஸ் டேக்குடன் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

உலகெங்கிலும் பெண்கள் சமூக வலைதளங்களில் உள்ளாடை புகைப்படங்களை பகிர்ந்து, '#ThisIsNotConsent', அதாவது 'இது ஒப்புதல் அல்ல' என்கிற ஹேஸ் டேக்குடன் தங்களின் கோபத்தை  வெளிப்படுத்தி வருகிறார்கள். 

பெண்கள் மத்தியில் இந்த கோபத்திற்கு  காரணம் என்ன...? என்று தெரிந்து கொள்ள முயற்சித்தோம். இதற்கான ஆரம்பம் அயர்லாந்து  நாட்டில் நடந்த வழக்கு என்பது தெரிய வந்தது. நவம்பர் 6-ம் தேதி கார்க் நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் 17 வயது டீன்-ஏஜ் பெண்ணை 27 வயது ஆணொருவர் பாலியல் வன்புணர்வு செய்ததை  'குற்றமில்லை' என்று தீர்ப்பு வழங்கி அந்நபரை விடுதலை செய்துள்ளது. 

இந்த வழக்கு குறித்த வாதத்தின் போது, குற்றம் சாட்டப்பட்டவரின்  வழக்கறிஞர் இளம்பெண்ணின் உள்ளாடைகளை நீதிமன்றத்தில் காண்பித்து வழக்கில் குற்றம் செய்தவர் இதனால் தான் ஈர்க்கப்பட்டார் என்றும் இப்படி ஆபாசமாக உடை அணிந்ததுதான் வன்புணர்வுக்கு காரணம் என்றும் வாதிட்டார்.

இந்த வழக்கிற்கான நீதிபதிகள் குழுவில் 8 ஆண் நீதிபதிகளும் 4 பெண் நீதிபதிகளும் இருந்தனர். அனைவரும்  குற்றம் சாட்டப்பட்டப்பட்டவரை குற்றவாளி இல்லை என்று கூறி வழக்கிலிருந்து விடுவித்தனர்.

 

 

இந்த வழக்கின் தீர்ப்பு பொது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து நாட்டு பெண்கள் பலரும் உள்ளாடைகளோடு இருப்பது பாலியல் ஆசைக்கான ஒப்புதல் அல்ல என்று கூறியுள்ளனர்.

"சமூகம் பல வழிகளில் முன்னேறி விட்டது. பாலியல் வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சாட்டும் மனநிலை மாற வேன்டும். பாலியல் வன்புணர்வு செய்யத் தூண்டியதாக சொல்லப்படும் காரணங்களெல்லாம் வெற்று மூடநம்பிக்கை" என்று சூஸன் டிலன் சிஎன்என்க்கு கூறியுள்ளார். 

 

 

 

 

பெண் அணிந்த ஆடைதான் பாலியல் வன்புணர்வுக்கு காரணம் என்று நீதிமன்றம் தன் தீர்ப்பின் மூலம் பெண்களுக்கு தன் பங்குக்கு தீமையிழைத்துள்ளது என்று பலரும் சமூக வலைதளங்களில் 'இது ஒப்புதல் அல்ல' என்ற ஹேஸ் டேக் மூலம் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தன் ஆதரவை தெரிவிக்க #IsupportHer  என்ற ஹேஸ் டேக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

 
இந்த போராட்டம் கேல்வே, லிங்ரிக்,டுயூப்ளின், பெல்ஃவெஸ்ட், கார்க் உள்ளிட்ட பல  பகுதிகளில் நாடு முழுவதுமான‌ சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது.

 

Click for more trending news


.